News March 16, 2024

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 32 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News December 3, 2025

பள்ளத்தூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம்

image

கந்திலி ஒன்றியம் பள்ளத்தூர் ஊராட்சியில் கால்நடைகளுக்கு இலவச மருத்துவ முகாம் இன்று ( டிச-3) ஊராட்சி மன்ற தலைவர் கே. சி. ராணி சின்னக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. இதில் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், ஆடுகளுக்கும் பசு மற்றும் எருமை கன்றுகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. திமுக கந்திலி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் முருகேசன், மாவட்ட கவுன்சிலர் சி. கே. சுப்பிரமணி ஆகியோர் பங்கேற்றனர்.

News December 3, 2025

1531 புத்தகங்கள் விற்பனை! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

திருப்பத்தூர் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் 5-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெற்றது. 4-ஆம் நாளான நேற்று (டிச.02) 1531 புத்தகங்கள்,1,94,057 மதிப்பில் விற்பனை செய்யப்பட்டது. என மாவட்ட நிர்வாகம் இன்று (டிச-03) அறிவித்துள்ளது. ஆறாம் நாளான நாளை வழக்கறிஞா் மணிமொழி, மற்றும் சமூக செயற்பாட்டாளர் மதிவதனி பங்கேற்று சிறப்புரை ஆற்றவுள்ளனர்.

News December 3, 2025

திருப்பத்தூர்:டிசம்பர் 06-ல் மருத்துவ முகாம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற (டிச.06) ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரின் ” நலன் காக்கும் ஸ்டாலின் ” திட்டத்தின் கீழ் 18-ஆவது மருத்துவ முகாம் திம்னாமுத்தூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி நடைபெறவுள்ளது. 40- வயதிற்கு மேற்பட்டோர், மக்கள் கலந்துக்கொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

error: Content is protected !!