News March 16, 2024

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள 43 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37 . கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News September 24, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு ரோந்து

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், 23.9.2025 அன்று இரவு முழுவதும் பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய சாலைகள் மற்றும் பொது இடங்களில் காவல் அதிகாரிகள் பொறுப்புடன் நியமிக்கப்பட்டு, அவசர சூழ்நிலைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் பகிரப்பட்டுள்ளன.

News September 24, 2025

ராணிப்பேட்டை நெல் விற்பனைக்கு எச்சரிக்கை

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா (23.09.2025) வெளியிட்ட அறிவிப்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். விவசாயிகள் தங்களது நிலத்தில் உற்பத்தி செய்த நெலையே ஆவணங்களுடன் கொண்டு வர வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

News September 23, 2025

இராணிப்பேட்டையில் காவல் துறை திடீர் ஆய்வு

image

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் இன்று (23.09.2025) நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனப்பாக்கம் வாரச்சந்தை, அரக்கோணம் ரயில்வே நிலையம், சுவால்பேட்டை சீனிவாசன் தெரு பகுதிகளில் திடீர் ஆய்வு நடத்தினார். பொதுமக்கள் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு குறித்து ரோந்து பணிகளை வலியுறுத்தினார். துணைக் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக், ஆய்வாளர் நாகேந்திரன் உடன் சென்றனர்.

error: Content is protected !!