News March 16, 2024

கரூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 27 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37 . கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News October 23, 2025

க.பரமத்தி அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகில் புஞ் சைகாளக்குறிச்சி எல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் மணி (60). இவர், நேற்று முன்தினம் நொய்யல்- க.பரமத்தி சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். – அப்போது, கிரஷர் மேடு அருகில் எதிரே வந்த கார் மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து, க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 23, 2025

கரூர்: கார் மோதி பைக்கில் சென்ற நபர் படுகாயம்

image

கரூர் மாவட்டம் கடவூர் அருகே கருங்கல்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (46). இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் தோகைமலை பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது அதே திசையில் பின்னால் விக்னேஷ் ஒட்டி வந்த கார் மோதியதில் ரமேஷ் படுகாயம் அடைந்து மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 22, 2025

கரூர்:அரவக்குறிச்சி கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு

image

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக இன்று ரூ.17 கோடி நிதி ஒதுக்கி நிர்வாக அனுமதி வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, கரூர் மாவட்ட மக்களின் சார்பில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில் பாலாஜி நன்றியை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!