News March 16, 2024

ஈரோடு மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 141 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News January 17, 2026

பவானிசாகர் அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

image

பவானிசாகர் அடுத்த பாகுதம்பாளையம், பாரதி நகர் பகுதியில் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த, பப்பண்ணன் (58) என்பவரை, பவானிசாகர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 180 மில்லி கொள்ளளவு கொண்ட 26 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பவானிசாகர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 17, 2026

புளியம்பட்டி: மது விற்றவர் கைது!

image

திருவள்ளுவர் தினமான நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கல்ராமனி குட்டையில், புஞ்சைபுளியம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு நபர் மது பாட்டில்களை விற்பனை செய்ததை கண்டனர். விசாரணையில் கணக்கரசம்பாளையத்தை சேர்ந்த காளிமுத்து என்பது, மது பாட்டில்களை விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிந்ததது. போலீசார் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!