News March 16, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 29 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News January 20, 2026

திண்டுக்கல்: வீட்டிலிருந்தே இனி கட்டணம் செலுத்தலாம்!

image

திண்டுக்கல் மக்களே, நீங்கள் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!<> TNEB செயலி <<>>அல்லது அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் கட்டணம் செலுத்துவது எளிது. உங்கள் பெயர் மற்றும் EB கணக்கு எண்ணை பதிவு செய்து, செலுத்த வேண்டிய தொகையை காட்டும். அதை UPI அல்லது Netbanking மூலம் செலுத்தலாம். மேலும் தகவல்களுக்கு, 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்புகொள்ளவும். இந்த தகவலை SAVE செய்து மற்றவருக்கு SHARE செய்யுங்கள்.

News January 20, 2026

திண்டுக்கல்: லஞ்சம் கேட்டாங்களா? இத பண்ணுங்க!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspdgldvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0451-2461828 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News January 20, 2026

திண்டுக்கல்லில் தட்டித் தூக்கிய அமைச்சர்!

image

திண்டுக்கல் மாவட்டம் , தருமத்துப்பட்டி ஊராட்சி செவனக்கரையான்பட்டியை சேர்ந்த அதிமுக, தேமுதிக, தவெக உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளிலிருந்து ஏராளமானோர் நேற்று (ஜன.19) விலகி திமுகவில் இணைந்தனர். இந்த இணைப்பு நிகழ்ச்சி அமைச்சர் ஐ. பெரியசாமி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, திமுகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து வரவேற்றார்.

error: Content is protected !!