News March 16, 2024
கடலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 66 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-32, 37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 6, 2025
கடலூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 6, 2025
கடலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிசம்பர் 13-ம் தேதி, மங்களுர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
கடலூர்: லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா திருத்தம் செய்வதற்கு, வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் திருமுட்டம் கிராமத்தைச் சேர்ந்த நேரு என்பவரிடம் ரூ.15,000 லஞ்சமாக கேட்டுள்ளார். இந்நிலையில் லஞ்சம் தர விரும்பாத அவர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.


