News March 16, 2024
அரியலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 21 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 23, 2025
அரியலூர்: புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் உடையார்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெட் டிக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தத்தனூர் வடக்கு தெருவை சேர்ந்த தங்கதுரை (வயது 50), அன்பழகன் (48) ஆகிய 2 பேரும் அவர்களது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
News September 23, 2025
அரியலூர்: ரூ.17 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது

அரியலூர் மாவட்டத்தில் கடன் தருவதாக ரூ.17 லட்சம் மோசடி செய்த மூன்று நபர்களை அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். (21.09.2025) வழக்கு பதிவு செய்து அன்றைய தினமே குற்றவாளிகளை கைது செய்த அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி பாராட்டினார்.
News September 23, 2025
அரியலூர் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக இரவு நேரங்களில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதன்படி (செப்டம்பர் 22) ரோந்து பணி செல்லக்கூடிய அதிகாரிகளின் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவரச காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்புகொண்டு பயன்பெறலாம். அல்லது 100ஐ அழைக்கவும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!