News June 15, 2024
விக்கிரவாண்டி சாதகமாக இருந்தும் ஏன் புறக்கணிப்பு?

2021 சட்டமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவின் புகழேந்தி 93,730, அதிமுகவின் முத்தமிழ் செல்வன் 84,157 வாக்குகள் பெற்றனர். இருவருக்கும் இடையே 9573 வாக்குகள் மட்டுமே வித்தியாசம். இதற்கு முன் 2019 இடைத்தேர்தலில் அதிமுக 1,13,766, திமுக 68,842 வாக்குகளும் பெற்றுள்ளன. இந்த தொகுதி அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், ஏன் இபிஎஸ் புறக்கணிக்கும் முடிவை எடுத்தார் என்ற குழப்பம் எழுந்துள்ளது.
Similar News
News March 2, 2026
குழந்தைகள் இருக்கும் வீட்டில் கண்டிப்பா இது இருக்கணும்

மக்களே, உங்கள் வீட்டில் 3 வயதுக்கு கீழ் குழந்தைகள் இருக்காங்களா? இவர்கள் கதவை திறந்து மூடும்போது கண்டிப்பாக கை விரல்களை நசுக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதனால், கைகள் வீங்குவதோடு, சில நேரங்களில் எலும்பு முறிவு கூட ஏற்படலாம். உங்கள் பிஞ்சு குழந்தையின் பிஞ்சு விரல்களை காக்க ஆன்லைனில் கிடைக்கும் Door guard/ Door stopper-ஐ பயன்படுத்தலாம். அனைவருக்கும் யூஸ் ஆகும். SHARE THIS.
News March 2, 2026
மகளிருக்கு மேலும் ₹5,000.. வந்தது ஹேப்பி நியூஸ்

பிப்.13-ல் மகளிர் வங்கிக் கணக்கில் ₹5,000 வரவு வைத்து தமிழக அரசு சர்ப்ரைஸ் கொடுத்தது. தற்போது, மேலும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் மீண்டும் ₹5,000 வழங்க அரசு திட்டமிட்டு வருகிறதாம். மகளிருக்கான கடனுதவி (அ) சுயதொழில் தொடங்கும் திட்டமாக இது இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கான, இறுதி வடிவம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
News March 2, 2026
செங்கோட்டையன் எடுத்தது நல்ல முடிவு: சசிகலா

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பலரும் திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்துள்ளனர். இதில் தனிக்கட்சி தொடங்கியுள்ள சசிகலா, திமுகவில் OPS இணைந்தது துரதிருஷ்டவசமானது; அவரின் அழிவுக்காலம் நெருங்கிவிட்டது என விமர்சித்திருந்தார். இந்நிலையில் எதிரியுடனும், துரோகிகளுடனும் சேராமல், செங்கோட்டையன் புதிய கட்சிக்கு சென்றுள்ளார்; அதுவரைக்கும் அவரின் முடிவு நல்லது என சசிகலா மனம் திறந்துள்ளார்.


