News August 27, 2025
‘பார்க்கிங்’ இயக்குநருடன் இணையும் விக்ரம்?

’பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் உடன் விக்ரம் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். ஏற்கெனவே இந்நிறுவனத்தின் தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். அத்துடன், ‘96’ பட இயக்குநர் பிரேம்குமார் உடனும் அவர் கைகோர்த்துள்ளார். இதனிடையே ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸுக்கும் விக்ரம் ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர்.
Similar News
News March 5, 2026
நாணயங்கள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது தெரியுமா?

தற்போது புழக்கத்தில் இருக்கும் நாணயங்கள் வட்ட வடிவில் இருப்பது தற்செயலாக நடந்ததில்லை. 1950-ம் ஆண்டு ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன *கூர்மையான முனைகள் இல்லாததால், நாணயங்களும் சேதமடையாது, அவற்றை உபயோகிப்பவருக்கும் கையில் கீரல் ஏற்படாது *நாணயங்களை வட்ட வடிவ செய்வது எளிது, செலவும் குறைவு *உற்பத்தியின் போது, வட்ட வடிவம் என்பதால், மெஷினிலும் சிக்காது. SHARE.
News March 5, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தடாலடியாக மாறியது

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $47 (இந்திய மதிப்பில் ₹4,329.80) உயர்ந்து $5,177.01-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $1 உயர்ந்து $84.31-க்கு விற்பனையாகிறது. இதன் தாக்கம், இந்திய சந்தையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
News March 5, 2026
தமிழக அரசியலில் இதுவே முதல்முறை

2026 தேர்தலுக்கு திமுக 21 கட்சிகளுடன் பிரமாண்டமான கூட்டணியை அமைத்துள்ளது. TN அரசியல் வரலாற்றிலேயே ஒரே கூட்டணி, சிந்தாமல் சிதறாமல் மேலும் புதிய கட்சிகளை சேர்த்து 4-வது முறையாக தேர்தலை சந்திப்பது இதுவே முதல் முறை. குறிப்பாக, அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள்கூட(பிரேமலதா, தமிமுன் அன்சாரி, நெல்லை முபாரக், கருணாஸ், தனியரசு உள்ளிட்டோர்) திமுகவுடன் இணைந்துள்ளன.


