News September 3, 2025
லோகேஷ் AD இயக்கத்தில் விக்ரம்?

லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விஷ்ணு, தற்போது கவின் – நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ‘Hi’ என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும், கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளியான ‘வீர தீர சூரன்’ படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
Similar News
News September 3, 2025
கில்லை வைத்து BCCI போடும் ப்ளான் : உத்தப்பா

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயஸ், ஜெய்ஸ்வால் இடம்பெறாதது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவர்களை தவிர்த்துவிட்டு சுப்மன் கில்லை துணை கேப்டனாக நியமித்ததற்கு பின்னால் பக்கா பிஸ்னஸ் உள்ளதாக ராபின் உத்தப்பா கூறியுள்ளார். சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், சச்சின், தோனி, கோலி, ரோஹித் வரிசையில் கில்லை, இந்திய அணியின் பிராண்டாக BCCI மாற்றவுள்ளது என்றார்.
News September 3, 2025
பாஜகவுடன் கூட்டணி ஏன்? EPS விளக்கம்

திமுக கூட்டணி கட்சிகளே ஜாக்கிரதை, ஸ்டாலின் உங்களை விழுங்கிவிடுவார் என EPS விமர்சித்துள்ளார். திமுக அகற்றப்பட வேண்டும் என்பதற்காகவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளுக்கு திமுக அரசு துரோகம் இழைத்து வருவதாகவும், பொதுக்கூட்டங்களில் மக்களின் எழுச்சியை பார்க்கும் போது அதிமுகவிற்கு பிரகாசமான ஒளி இருப்பது தெரிவதாகவும் கூறியுள்ளார்.
News September 3, 2025
லண்டன் சென்றடைந்தார் CM ஸ்டாலின்

புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றுள்ள CM ஸ்டாலின், ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு லண்டன் சென்றடைந்தார். அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, லண்டனில் முக்கிய முதலீடுகளை ஈர்க்கவுள்ளார். முன்னதாக, ஜெர்மனியில் ₹3.201 கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் மூலம் 6,250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.