News February 15, 2025
விகடன் இணையதளம் முடக்கம்

பிரதமர் மோடி குறித்து கேலிச்சித்திரம் வெளியிட்ட விகடன் இணையதளத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக முடக்கியுள்ளது. அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் கை விலங்கிட்டு அனுப்பப்பட்டது குறித்து கேலிச்சித்திரம் வெளியிட்டிருந்த விகடன், பிரதமர் மோடியை அதில் வரைந்திருந்தது. இதனை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டித்திருந்தார். இந்நிலையில் செய்தித் தளம் முடக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 3, 2025
திண்டிவனம் நகராட்சியில் ஆட்சியர் ஷேக்.அப்துல் ரஹ்மான் ஆய்வு

திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட வகாஃப் நகரில் உள்ள கருணாவூர் வாய்க்காலினை அகலப்படுத்துவது குறித்து ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (டிச.03) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திண்டிவனம் சார் ஆட்சியர் திரு.அ.ல.ஆகாஷ், திண்டிவனம் நகராட்சி ஆணையர் திருமதி.பானுமதி, நிண்டிவனம் வருணய் வட்டாட்சியர் திருயுவராஜ் உட்பட பலர் உள்ளனர்.
News December 3, 2025
பேய் மழை வெளுக்கும்.. 25 மாவட்டங்களில் அலர்ட்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என IMD கணித்துள்ளது. இதனால் சென்னை, செங்கை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தி.மலை, கடலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 3, 2025
தி.மலையில் தீபம் ஏற்ற உரிமை இவர்களுக்கு மட்டுமே உரிமை!

ஆண்டுதோறும் திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபத்தை ஏற்றும் உரிமை ஒரு வம்சத்தினருக்கு மட்டுமே உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், மலை உச்சியில் தீபம் ஏற்ற பர்வத ராஜகுலத்தினருக்கு (மீனவர்) உள்ள உரிமையாகும். இது, பண்டைய காலத்தில் சிவன் படையினராக இருந்த செம்படவர் சமூகத்தின் வழித்தோன்றல்களாக இவர்களை கருதுவதனால் வழங்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.


