News August 23, 2025
விஜய்யின் தவெக சின்னம்.. வெளியான புதிய தகவல்

வரும் தேர்தலில் தவெக போட்டியிடவுள்ள சின்னம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, வரப்போகும் தேர்தலில் தவெக ஆட்டோ சின்னத்தில் போட்டியிட முடிவு செய்திருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அச்சின்னம் குஜராத்தை சேர்ந்த Bharatiya Tribal Party-க்கு ஒதுக்கப்பட்டதால் தவெகவால் அதனை பெறமுடியாது. எனவே, தற்போது தேர்தல் ஆணையத்திடம் தவெக ’விசில்’ சின்னம் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News August 23, 2025
ஒரே நடிகரின் ஒரே நாள் ரிலீஸ்.. தமிழ் படங்களின் லிஸ்ட்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ‘DUDE’ மற்றும் ‘LIK’ ஆகிய 2 படங்களும் அக்.17 அன்று வெளியாகவுள்ளன. இவ்வாறு தமிழ் சினிமா ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவது முதல் முறையல்ல. இது கமல், ரஜினி காலத்தில் இருந்தே உள்ளது. இவ்வாறு ஒரே ஹீரோவின் நடிப்பில் ஒரே நாளில் வெளியான இரு படங்களை மேலே Swipe செய்து பாருங்கள். நீங்கள் இப்படி படம் பார்த்தது உண்டா?
News August 23, 2025
தர்மஸ்தலா வழக்கில் அதிரடி திருப்பம்

தர்மஸ்தலாவில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை ரேப் செய்து கொன்று புதைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், முன்னாள் பணியாளர் அடையாளம் காட்டிய இடத்தில் எந்தவித உடல்களும் இல்லை என்பது SIT விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பொய்யான புகார் அளித்ததாக பணியாளர் சின்னையா கைதாகியுள்ளார். அவரது வழக்கறிஞர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
News August 23, 2025
விஜய் குடும்பத்திற்கு உதவி.. PHOTO மூலம் திமுக பதிலடி

திமுக & ஸ்டாலினை கடுமையாக விஜய் விமர்சித்தார். இந்நிலையில், விஜய்யின் குடும்பத்திற்கு கருணாநிதி உதவியதாக PHOTO மூலம் திமுகவினர் பதிலடி கொடுக்கின்றனர். நம்மால் பயனடைந்தவர்கள், நம்மிடம் நன்றி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது. முன்னேறும் காலத்தில் கருணாநிதியும், திமுகவும் இவர்களுக்கு தேவைப்பட்டார்கள். ஆனால் முன்னேறிய பின்பு ‘துரோகி’ பட்டம் சூட்டுவது மோசமான அரசியல் என விமர்சிக்கின்றனர்.