News October 24, 2024

மாநாட்டிற்கு விஜய் வரும் பாதை மாற்றம்

image

தவெக மாநாட்டிற்கு விஜய் வரும் பாதை மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டு பந்தலுக்கு அரசின் தார் சாலை வழியாக விஜய்யின் வாகனம் வர போவதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், ரோஜா நகர் பகுதி வழியாக மாநாட்டு வாயிலுக்கு வந்து, அங்கிருந்து நேரடியாக மாநாட்டு திடலுக்குள் செல்லும் வகையில் தற்போது பாதை மாற்றப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News November 28, 2025

இம்ரான் இருப்பதற்கான ஆதாரத்தை கேட்கும் மகன்

image

இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை வெளியிட கோரி அவரது மகன் காசிம் வலியுறுத்தியுள்ளார். இவ்விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டும் என்ற அவர், மனிதாபிமானமற்ற முறையில் இம்ரான் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், அவரை பார்க்க அவரது சகோதரிகளுக்கு கூட அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும், அரசியல் நோக்கத்திற்காகவே அவர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

News November 28, 2025

நாணயங்கள் வட்ட வடிவில் இருப்பது ஏன்?

image

1950-ல் இருந்துதான் காயின்கள் வட்ட வடிவத்தில் தயாரிக்கப்படுகின்றன. இது எதார்த்தமாக நடந்த மாற்றம் இல்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. ➤வட்ட வடிவ காயின்களை செய்வது எளிது, பொருள் செலவும் குறைவு ➤வட்ட வடிவ காயின்கள் உருளும் என்பதால் மெஷின்களில் சிக்கிக்கொள்ளாது ➤கூர்மையான முனைகள் இல்லாததால் காயின்கள் சேதமடையாது. 99% பேருக்கு இது தெரியாது, SHARE THIS.

News November 28, 2025

IPL-க்கு வைபவ்.. WPL-க்கு தியா யாதவ்!

image

ஹரியானாவை சேர்ந்த தியா யாதவ்(16) WPL ஏலத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவரை டெல்லி அணி ₹10 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. 2023 U15 மகளிர் WC தொடரில் 578 ரன்களை விளாசி அனைவரின் கவனத்தையும் பெற்ற தியா, WPL தொடரில் விளையாடப்போகும் இளம் வீராங்கனை என்ற பெருமையை பெறவுள்ளார். இளம் வயதிலேயே WPL-லில் விளையாடவுள்ளதால், IPL-க்கு வைபவ்(13), WPL-க்கு தியா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!