News October 27, 2024

விஜய்யின் அரசியல் பயணம் (1/2)

image

*2008: ஈழத்தமிழர்களுக்காக கருப்பு சட்டை அணிந்து ரசிகர்களுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்தார் விஜய். *2009: விஜய் மக்கள் இயக்கம் உருவானது. அதே ஆண்டில் புதுச்சேரியில் நடைபெற்ற நலத்திட்ட விழாவில் தேவையான நேரத்தில் அரசியலுக்கு வருவதாக விஜய் பேசியிருந்தார். *2009: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து பேசினார். *2011: அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதரவு அளித்தார்.

Similar News

News January 19, 2026

நான் கேட்டேன்… EPS செஞ்சிட்டாரு: கஞ்சா கருப்பு

image

பெண்களுக்கு இலவச பஸ் போல, ஆண்களுக்கும் விடனும் என கேட்டிருந்தேன். அதை EPS அறிவித்துவிட்டார் என நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார். வேங்கை படத்தில், மாலை 6 மணிக்கு மேல் ஆண்களுக்கு ஃப்ரீ பஸ் விடுங்க, நாங்க பாட்டுக்கு குடிச்சிபுட்டு அதில் ஏறி வீட்டுக்கு போயிடுவோம் என கூறினேன். அதை தான் EPS அறிவித்துள்ளார் என்றும், அதேபோன்று அம்மா இலவச வீடு திட்டமும் முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.

News January 19, 2026

இனி அமைதியை பற்றி சிந்திக்க மாட்டேன்: டிரம்ப்

image

நார்வே தனக்கு நோபல் பரிசை கொடுக்க மறுத்துவிட்டதால் இனி அமைதியை பற்றி சிந்திக்க வேண்டிய கடமை தனக்கு இல்லை என நார்வே PM-க்கு டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார். USA-ன் நலனுக்காக உழைப்பதிலேயே தனது கவனம் இருக்கும் என்ற அவர், கிரீன்லாந்துக்கு உரிமை கோரும் ஆவணம் டென்மார்க்கிடம் இல்லை என்றார். மேலும், கிரீன்லாந்து மீது USA-ன் முழு கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே உலகம் பாதுகாப்பாக இருக்கும் என கூறியுள்ளார்.

News January 19, 2026

பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் வீரமரணம்

image

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்படி ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் சாட்ரோ என்ற பகுதியில் பதுங்கி இருந்து பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அப்போது ஒரு ராணுவ ஹவில்தார் வீரமரணமடைந்த நிலையில் மேலும் 8 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

error: Content is protected !!