News April 15, 2025
வக்ஃப் சட்டத்திற்கு எதிரான விஜய்யின் மனு ஏற்பு

வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. வக்ஃப் சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அதனை ரத்து செய்யக் கோரி விஜய் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு உள்பட வழக்கு தொடர்பான 10 மனுக்கள் நாளை விசாரணைக்காக பட்டியலிடப்படும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
Similar News
News November 27, 2025
நடிகை அம்பிகா வீட்டில் சோகம்.. கண்ணீர் அஞ்சலி

பிரபல நடிகைகள் அம்பிகா மற்றும் ராதாவின் தாயார் சரசம்மா நாயர்(87) காலமானார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவரின் இறுதிச்சடங்கு திருவனந்தபுரம் அருகே உள்ள அவர்களது சொந்த ஊரான கல்லாராவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலில் அதீத ஆர்வம் கொண்டிருந்த சரசம்மா, 2014-ம் ஆண்டு வரை கேரளா மகிளா காங்கிரஸின் தலைவராக இருந்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News November 27, 2025
USA-வில் ஆப்கானியர்கள் குடியேற்றத்துக்கு தடை!

USA வெள்ளை மாளிகை அருகே <<18400484>>துப்பாக்கிச்சூடு<<>> நடத்திய நபர் ஆப்கனை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டது. இதன் எதிரொலியாக ஆப்கனை சேர்ந்த அனைத்து குடியேற்ற கோரிக்கைகளையும் காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக USCIS கூறியுள்ளது. இதனிடையே, இந்த தாக்குதலை ‘பயங்கரவாத செயல்’ எனக்கூறி டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
வெல்வோம் 200, படைப்போம் வரலாறு: உதயநிதி

பிறந்தநாளை ஒட்டி அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடங்களில் DCM உதயநிதி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது பிறந்தநாள் விழாவில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் பேசிய உதயநிதி, SIR திட்டத்தில் வாக்குகளை உறுதி செய்யும் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்று கேட்டு கொண்டார். மேலும், வெல்வோம் 200 படைப்போம் வரலாறு எனவும், இதுவே தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தி என்றும் கூறினார்.


