News October 17, 2025
BREAKING: ‘விஜய் கட்சிக்கு அங்கீகாரம் இல்லை’

தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என ஐகோர்ட்டில் ECI தெரிவித்துள்ளது. கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விஜய்யின் தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியை எப்படி ரத்து செய்ய முடியும் என ECI தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இந்த வழக்கில் TN அரசு, DGP பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.
Similar News
News October 17, 2025
ஜப்பானின் Ex. பிரதமர் முராயமா காலமானார்!

ஜப்பானின் Ex. பிரதமர் டோமிச்சி முராயமா(101) உடல்நலக் குறைவால் காலமானார். 2-ம் உலக போரில் ஜப்பான் சரணடைந்த 50-வது ஆண்டு தினத்தில் பேசிய அவர், போரின் போது ஜப்பான், ஆசிய நாடுகளுக்கு பெரிய பாதிப்புகளை உண்டாக்கியதற்கு மிகவும் வருந்துவதாக கூறினார். 1995-ல் பேசிய இவரின் உரை உலகளவில் கவனம் ஈர்த்தது. 1994-96 வரை ஜப்பானின் பிரதமராக இருந்த முராயமாவின் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News October 17, 2025
₹717 கோடி வசூலித்த ‘காந்தாரா: சாப்டர் 1’

‘காந்தாரா: சாப்டர் 1’ உலகளவில் ₹717.50 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அக்.2-ம் தேதி வெளியான இப்படம் முதல் வாரத்தில் ₹509.25 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது வாரத்தில் மேலும் ₹208.25 கோடி வசூலித்துள்ளது. தற்போது தீபாவளி தொடர் விடுமுறை என்பதால் ₹1000 கோடி வசூலை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்க படம் பார்த்திட்டீங்களா?
News October 17, 2025
சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

கடந்த 4 நாட்களாக சட்டப்பேரவையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. கரூர் விவகாரம், கிட்னி திருட்டு விவகாரம், இருமல் மருந்து உயிரிழப்புகள் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை அரசின் மீது வைத்தனர். இதற்கு அரசு தரப்பில் இருந்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் விளக்கத்தையும் அளித்தனர். இந்நிலையில் சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்துள்ளார்.