News August 30, 2025
விஜய்யின் அடுத்த ஸ்கெட்ச்.. ஈரோட்டில் புதிய அத்தியாயம்

வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து மக்கள் சந்திப்பை நடத்த அக்கட்சி தலைவர் விஜய் முடிவு செய்துள்ளாராம். தவெகவின் கொள்கை தலைவரான தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி, ஈரோட்டில் இருந்து முதல் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், இன்று பனையூரில் மாவட்ட செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
Similar News
News August 30, 2025
உடற்தகுதி தேர்வுக்கு செல்லும் ரோஹித் சர்மா

செப்.13-ல் உடற்தகுதி தேர்வுக்கு ரோஹித் சர்மா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ODI கேப்டனாக உள்ள அவர், உடற்தகுதிக்கான Yo-Yo மற்றும் Bronco டெஸ்ட் எடுக்கவுள்ளார். இந்திய அணி, ஆஸி.,க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கான பயிற்சிகளில் ரோஹித் ஈடுபட்டு வருகிறார். IPL-க்கு பிறகு வெளிநாடுகளில் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற ரோஹித், தற்போது மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
News August 30, 2025
திமுக கூட்டணியில் புதிய கட்சிகள்? ஸ்டாலின் பதில்

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாக கடந்த சில நாள்களாக பேசப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, புதிய கட்சிகள் திமுக பக்கம் வருகிறதோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் வருகின்றனர் என்று CM ஸ்டாலின் பதிலளித்துள்ளார். மேலும், கருத்துக்கணிப்புகள் என்ன சொன்னாலும் அவற்றை மிஞ்சி திமுக வெற்றிபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 30, 2025
RECIPE: வயசுப் பெண்களுக்கு முக்கியமான உளுந்தங்களி!

◆உளுந்தங்களியில் கார்போஹைட்ரேட், பொட்டாசியம், வைட்டமின் நிறைந்திருப்பதால், பெண்களுக்கு மிகவும் நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர்.
➥தண்ணீரில் அரிசிமாவு, வறுத்த பாசிப்பருப்பு மாவை கலந்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
➥அதை நன்கு கொதிக்க வைத்து, கருப்பட்டி or வெல்லம், உளுந்து மாவு சேர்த்து நன்றாக கிளறவும்.
➥அதில், ஏலக்காய், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்தால் சுவையான உளுந்தங்களி ரெடி. SHARE IT.