News September 5, 2025
திமுக, அதிமுகவுக்கு எதிராக விஜய் போடும் மெகா பிளான்

திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு எதிராக முழுவீச்சில் களமாடத் தயாராகி வருகிறார் விஜய். செப்.13-ல் முதல் மக்கள் சந்திப்பை தொடங்க திட்டமிட்டுள்ள அவர், மெகா பிளான் போட்டு வைத்துள்ளாராம். முதல்கட்டமாக 100 தொகுதிகளுக்கு சென்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. விவசாயிகள், பெண்கள், தொழிலதிபர்களை சந்தித்து குறைகளை கேட்டறியவும் அவர் ஏற்பாடு செய்து வருகிறார். விஜய்யின் வியூகம் எடுபடுமா?
Similar News
News March 25, 2026
விடுமுறை.. ஸ்பெஷல் பஸ்கள் அறிவிப்பு

வார இறுதி & மகாவீர் ஜெயந்தி (மார்ச் 31) விடுமுறையை முன்னிட்டு, வெளியூரில் இருப்போர் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டிருப்பீர்கள். நீங்கள் சிரமமின்றி சொந்த ஊர் செல்ல ஏதுவாக 915 சிறப்பு பஸ்களை அரசு ஏற்பாடு செய்துள்ளது. எனவே, சொந்த ஊர் செல்ல திட்டமிட்டிருப்போர் இங்கே <
News March 25, 2026
சென்னையில் IPL போட்டி நடக்காதா?

TN-ல் ஏப்.23 தேர்தல் நடக்கவுள்ளதால் சென்னையில் நடக்கவுள்ள 2 IPL போட்டிகளை ஒத்திவைக்குமாறு பிரபாகரன் என்பவர் HC-ல் வழக்கு தொடர்ந்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் போலீஸுக்கு இது கூடுதல் சுமை எனவும் தேவையில்லாத சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படலாம் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால், ஏப்.3-ல் CSK vs PBKS & ஏப்.11-ல் CSK vs DC போட்டிகளை ஒத்திவைக்கும் நிலை ஏற்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
News March 25, 2026
புதுச்சேரியில் 5 தொகுதிகளில் திமுக – காங்., நேரடி போட்டி?

புதுச்சேரியில் தொகுதி உடன்படிக்கை ஏற்பட்ட நிலையிலும், 5 தொகுதிகளில் திமுக – காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து தொகுதிகளிலும் இரு கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில், மங்கலம், திருபுவனை, நெல்லித்தோப்பு, ராஜ்பவன், காலாப்பட்டு தொகுதிகளில் காங்., வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெறாமல், வாக்கு சேகரிப்பில் இறங்கியதால் குழப்பம் எழுந்துள்ளது.


