News March 26, 2025
விஜயின் மாஸ்டர் பிளான்.. தனித்து இறங்கும் தவெக?

2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து களமிறங்க விஜய் முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனித்து களமிறங்கி தனது அரசியல் பலத்தை நிரூபிக்க அவர் முடிவு செய்துள்ளாராம். இதனால் திமுக, அதிமுக- பாஜக (உறுதியாகவில்லை), தவெக, நாதக என தமிழக அரசியல் களத்தில் பல முனை போட்டி உருவாகி உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு மாறுபட்ட தேர்தல் களத்தை 2026 சட்டமன்ற தேர்தல் சந்திக்க இருக்கிறது.
Similar News
News December 4, 2025
திருவாரூர்: மழையால் பாதிக்கப்பட்ட இடத்தில் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள சவளக்காரன் கிராமத்தில் டிட்வா புயல் காரணமாக, தொடர்ந்து பெய்த கனமழையின் காரணத்தினால் சவளக்காரன், மேலநாலாநல்லூர், கீழநாலாநல்லூர், அரசூர் உள்ளிட்ட கிராமங்களில் மழையில் இடிந்து விழுந்த வீடுகள் மற்றும் குடியிருப்புகளை கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டு கணக்கெடுப்பு செய்தனர்.
News December 4, 2025
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் BJP செய்யும் சூழ்ச்சி: காங்., MP

பாஜகவின் வேலையே மதங்களுக்கு இடையே சூழ்ச்சி செய்வதுதான் என MP சசிகாந்த் செந்தில் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக சூழ்ச்சிகளுக்கு TN இடமளிக்கக்கூடாது என்ற அவர், இங்கிருக்கும் கலாசாரம் வேறு என்பதை நாம் அவர்களுக்கு உணர்த்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மையை கொண்டாடும் கலாசாரமாக தமிழ் கலாசாரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
AVM சரவணன் காலமானார்.. முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி

நேற்று இரவு தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடிய AVM சரவணன், இன்று அதிகாலை 5 மணியளவில் காலமானார். இந்த செய்தியை கேட்டு துடித்துப்போன ரஜினி, முதல் ஆளாக அவரின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார். AVM ஸ்டுடியோவின் 3-வது தளத்தில் அவருக்கு இன்று மாலை 3.30 மணி வரை இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைபிரபலங்கள் இன்னும் சற்றுநேரத்தில் அஞ்சலி செலுத்தவிருப்பதாக கூறப்படுகிறது.


