News October 9, 2025

விஜய்யின் தலைமை பண்பு: HC கருத்தை நீக்க கோரிக்கை

image

கரூர் துயரம் தொடர்பாக அமைக்கப்பட்ட SIT விசாரணைக்கு தடை கோரி தவெக தரப்பில் SC-ல் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், 41 பேர் உயிரிழப்புக்கு சமூக விரோத சக்திகளின் செயல்பாடுகளே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், விஜய்யின் தலைமை பண்பு குறித்த HC-ன் கருத்தை நீக்க கோரியுள்ள தவெக, கூட்ட நெரிசலில் இருந்து விஜய் தப்பி ஓடியதாக HC கூறியதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Similar News

News October 9, 2025

திமுக ஆட்சியில் தடையின்றி கஞ்சா விற்பனை: EPS

image

திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா தங்கி தடையின்றி கிடைப்பதாகவும், அதற்கு திமுக நிர்வாகிகள் ஆதரவாக இருப்பதால் அதன் விற்பனையை போலீசால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News October 9, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 9, புரட்டாசி 23 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM ▶கெளரி நல்ல நேரம்: 01:00 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 03:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 09:00 AM – 10:30 AM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: தேய்பிறை

News October 9, 2025

Cinema Roundup: ‘பைசன்’ படத்திற்கு U/A சான்று

image

*துருவ் விக்ரமின் ‘பைசன்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. *தெலுங்கில் ‘பைசன்’ படம் அக்.24-ம் தேதி வெளியாகிறது. *துல்கர் சல்மானின் படத்தில் நடிக்க பூஜா ஹெக்டே ₹3 கோடி சம்பளம் பெற்றதாக தகவல். * கல்யாணி பிரியதர்ஷனின் ‘லோகா’ அக்.23-ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகும் என தகவல்.

error: Content is protected !!