News March 27, 2025
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து

நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். x தளத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், அன்புத் தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியுள்ளார். உற்சாகத்தோடும், துணிவுடனும், தன்னம்பிக்கையோடும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம் எனவும் பதிவிட்டுள்ளார்.
Similar News
News August 21, 2025
YO-YO-க்கு பதில் BRONCO: பிசிசிஐயின் புதிய திட்டம்

இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடற்தகுதியை மேம்படுத்த பிசிசிஐ புதிய பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. அணி தேர்வுக்கு முன்பாக BRONCO சோதனையை வீரர்கள் மேற்கொள்ள வேண்டும். இதில் 1,200 மீ தூரத்தை ஐந்து செட்களாக 20மீ, 40மீ, 60மீ என தனித்தனியே ஓய்வின்றி 6 நிமிடங்களுக்குள் ஓட வேண்டும். இந்த BRONCO TEST ரக்பி விளையாட்டுடன் தொடர்புடையது. இதுவரை அணி தேர்வுக்கு YO-YO Test பின்பற்றப்படுகிறது.
News August 21, 2025
உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ்

‘வைகை கரை காற்றே நில்லு’ என்ற பாடல் இன்றும் பஸ்களில் ஒலித்துக் கொண்டிருக்க, நம்மை அறியாமலே நாம் தாளம் போட்டு நினைவுகளால் உருகுகிறோம். அந்த அளவு தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘உயிருள்ளவரை உஷா’ படம் 4K தொழில்நுட்பத்தில் செப்டம்பரில் ரீ ரிலீஸ் ஆகவுள்ளதாக அதன் இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரீ ரிலீஸ் வரிசையில் ரெட்ரோ வகை படமும் தற்போது இணைந்துள்ளது.
News August 21, 2025
தவெக மாநாட்டில் மோர் குடிப்பவர்களே அலர்ட்

மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டில், உணவு விற்பனை படு ஜோராக நடந்துவருகிறது. குறிப்பாக தயிர், தக்காளி சாதம் ₹70- ₹80, வெஜ் பிரியாணி ₹100, கூழ் ₹50, தண்ணீர் பாட்டில் ₹40, கரும்பு ஜூஸ் ₹30, சாத்துக்குடி ஜூஸ் ₹50, ஐஸ்கிரீம் ₹70 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் என்ன கொடுமை என்றால், இலவசமாக கொடுப்பது போல மோரை கொடுத்து, ஒரு டம்ளர் ₹50 என சிலர் அடாவடியாக பணம் வசூல் செய்கின்றனராம்.