News October 20, 2025
அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் விஜய் பட வில்லன்

அஜித்குமாருடன் நடிக்க ஆசைப்படுவதாக வித்யூத் ஜம்வால் தெரிவித்துள்ளார். ‘பில்லா 2’ படத்திலேயே தன்னை அஜித் பாராட்டியதாகவும், அப்போது, தான் 2-ம் கட்ட நடிகர் தான் என்றும் நெகிழ்ந்துள்ளார். மேலும், அஜித் ஒரு சிறந்த மனிதர் என்றும் புகழ்ந்துள்ளார். ‘பில்லா 2’ படத்தில் திம்த்ரி என்ற ரோலில் நடித்த வித்யூத், ‘துப்பாக்கி’ படத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார். ‘மதராஸி’-யில் ரீ-எண்ட்ரி கொடுத்திருந்தார்.
Similar News
News March 29, 2026
ஜெயலலிதாவுக்கு பிறகு விஜய் மட்டுமே செய்த செயல்

பெரம்பூர் & திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். 2 தொகுதிகளில் போட்டியிட காரணம், ஒன்றில் தோற்றுவிட்டால் மற்றொன்றில் ஜெயித்து பேரவைக்குள் நுழையலாம் என்பதே. 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், ஒரு தொகுதி MLA பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். முன்னதாக, 1991-ல் பர்கூர், காங்கேயம் தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா இரண்டிலும் வெற்றி பெற்றார். பின்னர், பர்கூரில் MLA-வாக தொடர்ந்தார்.
News March 29, 2026
இன்ஸ்டாவில் பெண்களின் அந்தரங்க போட்டோ.. உஷார்!

அண்மைக் காலமாக இன்ஸ்டாவில் Adult content அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக சில இளம்பெண்கள் இன்ஸ்டாவில் Subscription feature-ஐ பயன்படுத்தி (மாதத்திற்கு ₹89 – ₹890 வரை) தங்களது அந்தரங்க போட்டோக்களை பகிர்ந்து பணம் ஈட்டி வருகின்றனர். மெட்டா நிறுவனம் இதனை தடுக்க முயன்று வருவதாக தெரிவித்துள்ளது. ஆனாலும், SM-ல் பகிரப்படும் இதுபோன்ற போட்டோக்களை தடுக்க என்னதான் வழி?
News March 29, 2026
9 முறை திமுக வென்ற பெரம்பூர் தொகுதியில் விஜய்

பெரம்பூர் & திருச்சி கிழக்கில் விஜய் போட்டியிடுகிறார். இதில் பெரம்பூர் தொகுதியில் இதுவரை திமுக 9, CPM 3, அதிமுக 2, காங்., 1 முறை வென்றுள்ளது. கடந்த 2021 தேர்தலில் திமுகவின் RD சேகர் 54,976 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரான NR தனபாலனை தோல்வியுறச் செய்தார். 2026 தேர்தலில் இத்தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் ஆர்.டி.சேகர், அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளரும் போட்டியிடுகின்றனர்.


