News March 29, 2024
விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கும் புதிய படம்

நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர், புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். சட்டம் ஒரு இருட்டறை உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ள அவர், குணச்சித்திர வேடங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். அதன்படி, புதுமுக இயக்குனர் நிதின் வேமுபதி இயக்கும் புதிய திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கிறார். நாயை மையமாக வைத்து படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 27, 2025
உடைகிறது ‘Event Management’ முதல்வரின் பிம்பம்: TVK

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு, கோரிக்கைகளுக்காக போராடுபவர்களை ஒடுக்கி, அட்டூழியத்தில் ஈடுபடுவதாக TVK அருண்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களின் போராட்டங்களை நசுக்கும் செயல், அரசின் ‘விளம்பர மாடல்’ முகத்திரையை கிழித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ‘Event Management’ மூலம், தன்னை முன்னிறுத்தும் CM-ன் பிம்பம் உடைத்து எறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News December 27, 2025
சற்றுமுன்: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

தங்கம் விலை இன்று ஒரேநாளில் ₹1,680 அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது. 22 கேரட் தங்கம் காலையில் சவரனுக்கு ₹880 அதிகரித்த நிலையில், மாலையில் மேலும் ₹800 உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது 1 சவரன் தங்கம் ₹1,04,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹5,600 அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாளை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இருக்காது.
News December 27, 2025
தவெகவில் நடிகர் கவுண்டமணி இணைந்து விட்டாரா? CLARITY

நடிகர் கவுண்டமணி தவெகவில் இணைந்துவிட்டதாக SM-ல் செய்தி பரவி வருகிறது. அத்துடன், அவருக்கு விஜய் சால்வை அணிவித்து வரவேற்பது போன்ற போட்டோவும் வைரலாகி வருகிறது. ஆனால், செங்கோட்டையன் தவெகவில் இணைந்த போட்டோவை எடிட் செய்து, சிலர் இப்படி தவறான தகவலை பரப்பியது தெரியவந்துள்ளது. விஜய் தற்போது மலேசியாவில் ‘ஜனநாயகன்’ பட ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


