News August 20, 2025

மதுரையில் விஜய்யின் அப்பா! அம்மா!

image

தவெக இரண்டாம் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா மதுரை வந்தடைந்தனர். அவர்களுக்கு தவெக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பிரபல நட்சத்திர ஹோட்டலில் தங்கும் அவர்கள், இன்று மாலை மதுரைக்கு வரும் விஜய்யை சந்திக்கின்றனர். இதன்பின், விஜய்யுடன் அவர்களும் மாநாடு நடைபெறும் திடலை பார்வையிட உள்ளனர்.

Similar News

News January 20, 2026

பிலிப்பைன்ஸிற்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா

image

சூப்பர் சூறாவளி <<18247918>>’Fung-wong’ <<>>ஏற்படுத்திய பேரழிவால் தவிக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு உதவ இந்தியா களம் இறங்கியுள்ளது. இந்திய விமானப்படையின் C-17 விமானம் மூலம் மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் என சுமார் 30 டன் நிவாரண பொருள்கள் மற்றும் நடமாடும் மருத்துவமனைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸுடன் இந்தியா துணைநிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

News January 20, 2026

மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. மகிழ்ச்சியான செய்தி

image

குலவிளக்கு திட்டத்தின் கீழ் மகளிருக்கு ₹2,000 வழங்கப்படும் என அதிமுக வாக்குறுதி அளித்ததில் இருந்தே, திமுக பரபரப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விரைவில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு, தேர்தலுக்கு முன்பே வழங்கிட திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, விரைவில் இனிப்பான செய்தி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 20, 2026

நான் லவ் பண்ணலங்க: ருக்மிணி வசந்த்

image

நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ருக்மிணி வசந்த் காதலில் இருப்பதாக SM-ல் தகவல்கள் பரவி வந்தன. இளைஞர் ஒருவருடன் இருக்கும் புகைப்படமும் வைரலானது. இந்நிலையில் இதை மறுத்துள்ள ருக்மிணி, நண்பர்களுடன் இருந்த புகைப்படங்களை வைத்து சிலர் தவறான தகவல்களை பரப்பி வருவதாக கூறியுள்ளார். தான் இப்போது வரை காதலில் இல்லை என்றும், காதல் வந்தால் நிச்சயம் ரசிகர்களுக்கு சொல்வேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!