News October 3, 2025

விஜய் ரசிகர்கள் திருந்த வேண்டும்: வேல்முருகன்

image

கரூரில் பெருந்துயரம் நடந்தபோதும் ‘Stand with Vijay’ என டிரெண்ட் செய்யும் விஜய்யின் ரசிகர்கள் திருந்த வேண்டும் என்று தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். சென்னை OMR சாலையில் போதை பொருள்களை N.ஆனந்த் விற்பதாக சுசித்ரா குற்றஞ்சாட்டிய நிலையில், போலீஸார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். இதற்கு போலீஸ் உயரதிகாரிகளும் உடந்தையா என்று கேட்க தோன்றுவதாகவும் தெரிவித்தார்.

Similar News

News October 3, 2025

அமைதிக்கு உடன்படாத ஹமாஸ்: 57 பேர் பலி

image

டிரம்ப் வகுத்த அமைதி திட்டத்துக்கு இஸ்ரேல் PM ஒப்புக்கொண்டாலும், ஹமாஸ் செவிசாய்ப்பதாக இல்லை. இதனால் மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியதில், நேற்று 57 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு காசாவில் 27 பேரும், உணவு விநியோக மையங்களில் 30 பேரும் கொல்லப்பட்டதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். காசாவிற்கு உதவி பொருள்கள் ஏற்றிவந்த கப்பல்களையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளது.

News October 3, 2025

BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ₹880 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹880 குறைந்து ₹86,720-க்கும், கிராமுக்கு ₹110 குறைந்து ₹10,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கம் விலை மீண்டும் குறையத் தொடங்கியதால், நகை பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

News October 3, 2025

இன்னொரு வீடியோவை வெளியிடவுள்ளாரா விஜய்?

image

கரூர் சம்பவத்துக்கு 3 நாட்கள் கழித்து விஜய் வெளியிட்ட வீடியோ அவருக்கே BackFire ஆகியிருக்கிறது. இதனால், வீடியோவில் சொன்னது தெளிவு இல்லாதது போல இருந்ததாகவும், மக்களுக்கு புரியும்படி இன்னொரு வீடியோவோ, அறிக்கையோ விட்டால் சரியாக இருக்கும் என தந்தை SAC-ஏ விஜய்யிடம் சொன்னதாக தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர். தந்தையின் இந்த அட்வைஸை விஜய் ஏற்பாரா?

error: Content is protected !!