News October 7, 2025
விஜய் அதிரடி முடிவு: யாரும் எதிர்பார்க்காத திருப்பம்

கரூர் துயரம் விஜய்யின் தீவிர அரசியலுக்கு முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது. இவ்விவகாரத்தில் 3 அறிக்கை, ஒரு வீடியோ வெளியிட்டு அமைதியாக இருக்கிறார்; ஊடகங்களையும் சந்திக்கவில்லை. இந்நிலையில், இனியும் காலதாமதம் செய்தால், அது கட்சியின் செயல்பாட்டை முழுமையாக பாதிக்கும் என கட்சி நிர்வாகிகள் அவரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து, கரூர் செல்வதற்கு முன், ஊடகங்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News October 7, 2025
விஜயகாந்த் குடும்பத்தில் துயரம்.. கண்ணீர் அஞ்சலி

பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி (83) சென்னையில் காலமானார். உடல்நலக்குறைவால் தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்துள்ளது. இதனால், பிரேமலதாவின் பரப்புரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் மூத்த சகோதரி சமீபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தில் மீண்டும் ஒரு துக்கமான நிகழ்வு நடந்தது, தேமுதிகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
News October 7, 2025
ராமதாஸை நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தொலைபேசி வாயிலாக ராமதாஸின் உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் விசாரித்துள்ளார். தற்போது ரிஷிகேஷ், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு ரஜினி ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 7, 2025
இந்திய அணியின் தோல்விக்கு இது காரணமாகலாம்: கைஃப்

ரோஹித் சர்மாவை ODI கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி, கில்லிடம் வழங்கப்பட்டது சர்ச்சையானது. இந்நிலையில், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக கில் இதற்கு ஒப்புக்கொண்டதாக Ex இந்திய வீரர் முகமது கைஃப் குற்றம்சாட்டியுள்ளார். இது அணியின் தோல்விக்கு வழிவகுக்கும் என்ற அவர், 2027 WC-க்கு பின் கில்லுக்கு இவ்வாய்ப்பினை வழங்கியிருக்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.