News July 6, 2025

விஜயின் ஒழுக்கம் டோலிவுட்டில் இல்லை: தில் ராஜு

image

தனது பணிக்காக 6 மாதங்களை ஒதுக்கும் விஜய், மாதத்திற்கு 20 நாட்கள் வேலை செய்வதாக ‘வாரிசு’ பட தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார். இதனை மற்ற ஹீரோக்களும் பின்பற்றினால் தயாரிப்பாளருக்கு நன்மை பயக்கும் என்ற அவர், தெலுங்கு சினிமாவில் இந்த அமைப்பு சரிந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் & விஜய்யின் டைமிங் பஞ்சுவலை பலரும் பாராட்டியுள்ளனர்.

Similar News

News July 6, 2025

ஹோம்லியாக மாறிய கன்னட கவர்ச்சி நாயகி

image

பிரபல கன்னட நடிகை சைத்ரா ஆச்சர் ‘3BHK’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். சித்தார்த்தின் காதல் நாயகியாக வரும் அவரது அமைதியான ரோல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. அவர் கன்னடத்தில் ஹிட்டான ‘டோபி’ உள்பட பல படங்களில் கவர்ச்சியாகவே திரையில் தோன்றிய நிலையில், தமிழில் அவரது கதாபாத்திரம் ரசிக்கும்படியாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் சிலாகிக்கின்றனர்.

News July 6, 2025

சட்டவிரோத பரிசோதனையில் 741 பேர் பலி.. ஷாக் ரிப்போர்ட்

image

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள அரசின் சிறுநீரக நோய்கள் & ஆராய்ச்சி மையத்தில் ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 2,352 நோயாளிகளில் 741 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல் CAG அறிக்கையின் மூலம் வெளியே வந்துள்ளது. 91% சிகிச்சை தோல்வியடைந்ததாக CAG அறிக்கை கூறுகிறது. இந்த பரிசோதனைகள் சட்டவிரோதமாக நடைபெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு காங். கண்டனம் தெரிவித்துள்ளது.

News July 6, 2025

Bank Statement இல்லாமல் பர்சனல் லோன் பெற முடியுமா?

image

*இன்கம்டேக்ஸ் ரிட்டர்ன் ஸ்டேட்மன்ட் (ITR) இருக்க வேண்டும். *700-க்கு மேல் CIBIL ஸ்கோர். *நகை, நிலம் போன்ற மதிப்புமிக்க சொத்துகளை கூட காண்பிக்கலாம். *உங்களின் தற்போதைய சுயதொழிலை குறைந்தது 1 – 2 ஆண்டுகளுக்கு நடத்தியிருக்க வேண்டும். *ஏதேனும் கடன் வாங்கியிருப்பின் அதனை முறையாகச் செலுத்தியிருக்க வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தாலும் பேங்க் ஸ்டேட்மென்ட் இல்லாமல் பர்சனல் லோன் பெறலாம்.

error: Content is protected !!