News April 26, 2025
ரீ ரிலீஸ் லிஸ்ட்டில் விஜயின் ப்ளாக்பஸ்டர் படம்

அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சூர்யாவின் காக்க காக்க படங்களை ரீ ரிலிஸ் செய்யவுள்ளதாக கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ரீ ரிலிஸ் செய்யப்பட்ட விஜய்யின் சச்சின் அப்போது வெளியானதை விட, தற்போது 10 மடங்கு லாபம் எனக் கூறிய தாணு, 2026-ல் தெறி, ரஜினியின் கபாலி ஆகிய படங்களை ரீ ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் உறுதியளித்துள்ளார். வேறு எந்தப் படத்தை ரீ ரிலிஸ் செய்யலாம் என நினைக்கிறீர்கள்?
Similar News
News December 25, 2025
விஜய் ஒரு சங்கி.. மறைமுகமாக சாடிய கருணாஸ்

சினிமாவில் ₹200 கோடி சம்பளத்தை விடுத்து, ₹2 லட்சம் கோடி சம்பாதிக்கலாம் என அரசியலுக்கு விஜய் வந்துள்ளதாக கருணாஸ் விமர்சித்துள்ளார். விஜய் ஒரு சங்கி என மறைமுகமாக சாடிய கருணாஸ், அவர் எந்த உள்நோக்கத்துடன் வந்திருக்கிறார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மக்கள் பிரச்னைகளை களத்தில் சென்று தீர்க்கும் நபரே உண்மையான தலைவன் எனவும் ஓடி ஒளிபவர் தலைவனாக முடியாது என்றும் பேசியுள்ளார்.
News December 25, 2025
கிறிஸ்துமஸ் கொண்டாடிய பிரபலங்கள் (PHOTOS)

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இந்நிலையில் சினிமா நட்சத்திரங்களும், பிரபலங்களும் தங்களது கிறிஸ்துமஸ் கொண்டாட்ட போட்டோக்களை SM-ல் பகிர்ந்து ரசிகர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமன்னா தொடங்கி ஸ்மிருதி மந்தனா வரை ஒவ்வொருவரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கே உரித்தான Red, White தீமில் ஜொலிக்கின்றனர். அந்த போட்டோக்களை மேலே Swipe செய்து பார்க்கவும்.
News December 25, 2025
விந்தணு தானம்: டெலிகிராம் CEO கொடுத்த ஜாக்பாட்

தனது விந்தணு மூலமாக IVF சிகிச்சையில் குழந்தை பெற்றுக்கொள்ளும் 37 வயது பெண்களின் அனைத்து செலவையும் ஏற்பதாக டெலிகிராம் CEO பாவெல் துரோவ் பேசியுள்ளதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. பாவெல் துரோவின் விந்தணு தானத்தின் மூலம் ஏற்கெனவே 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன. அக்குழந்தைகளுக்கு தனது சொத்துக்களை பிரித்து வழங்குவதாக அவர் ஏற்கெனவே ஜாக்பாட் அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.


