News June 7, 2024
அரசியலில் இவர்களுடன் விஜய் கூட்டணி?

மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு (பாஜக) வாழ்த்து தெரிவிக்காத விஜய், 40 தொகுதிகளை வென்றெடுத்த திமுக பெயரை கூட சொல்லவில்லை. ஆனால், மாநில அந்தஸ்து பெற்றுள்ள நாதக, விசிக பெயரைக் குறிப்பிட்டு வாழ்த்து கூறியுள்ளார். 2026 பேரவைத் தேர்தலை குறிவைத்து அரசியல் காய் நகர்த்தும் அவர், அரசியலில் இருபெரும் சக்தியாக உருவெடுத்துள்ள தலைவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தது கூட்டணிக்கான சமிஞ்கை என சொல்லப்படுகிறது.
Similar News
News September 23, 2025
தாறுமாறாக மாறிய தங்கம் விலை

வரலாறு காணாத உச்சமாக, தங்கம் விலை கடந்த 2 நாள்களில் சவரனுக்கு ₹2,800 உயர்ந்து நடுத்தர மக்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. 1920-ல் சவரன் ₹21-க்கு விற்கப்பட்ட தங்கம், இன்று ₹85,120-க்கு விற்பனையாகிறது. இதன்படி, 105 ஆண்டுகளில் 3,97,235% தங்கம் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2021 (₹35,000) முதல் 2025 இன்று வரையிலான (₹85,120) 5 ஆண்டுகளில் மட்டும் 138% தங்கம் விலை உயர்ந்துள்ளது.
News September 23, 2025
ஆண்மையை பாதிக்கும்… WARNING!

விந்தணுக்களின் எண்ணிக்கை அல்லது தரத்தை பாதிக்கக்கூடிய உணவுகளின் பட்டியல் மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த உணவுகள் “விந்தணுக்களைக் கொல்லும்” உணவுகள் அல்ல. ஆனால், இந்த உணவுகளை அதிகளவில் அல்லது தொடர்ந்து உட்கொண்டால், காலப்போக்கில் விந்தணுக்களை பாதிக்கும். உங்களுக்கு தெரிந்த டிப்ஸை கமெண்ட்ல சொல்லுங்க. பயனுள்ள செய்தியை SHARE பண்ணுங்க.
News September 23, 2025
திமுகவை காப்பாற்றியது ஜெயலலிதா: EPS

திமுகவில் இருந்து பிரிந்தவர்கள், கட்சி அலுவலகத்தை கைப்பற்ற நினைத்த போது, அதை காப்பாற்றியது ஜெயலலிதா என EPS தெரிவித்துள்ளார். திமுகவினர் இதை மறந்துவிட வேண்டாம் எனவும், அதிமுகவின் அலுவலகம் அமித்ஷா வீட்டில் இல்லை, சென்னையில் தான் இருக்கிறது என்பதை கனிமொழி வந்து பார்க்கலாம் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், அதிமுகவை முடக்க திமுக செய்த அத்தனை சதிகளும் முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.