News January 24, 2025
புஸ்ஸியை வெளியே அனுப்பி விட்டு, விஜய் ஆலோசனை

தவெக மாவட்டச் செயலாளர்களிடம் அக்கட்சியின் தலைவர் விஜய் தனித்தனியாக ஆலோசித்து வருகிறார். பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை, தனது அறையில் இருந்து வெளியே அனுப்பிவிட்டு, கட்சிப் பொறுப்பாளர்களை ஒவ்வொருவராக அழைத்து, கட்சியின் கட்டமைப்பு, மக்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பு, மாவட்ட அளவில் இருக்கும் பிரச்னை, புதிய நிர்வாகிகள் நியமனம், நிர்வாகிகளை நியமிக்க பணம் வசூல் விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கிறார்.
Similar News
News January 5, 2026
பொங்கலுக்கு டிரெயின்ல போறீங்களா: இது தெரியுமா?

பொங்கல் சீசனில் சொந்த ஊருக்கு செல்ல ரயில்களே ஃபர்ஸ்ட் சாய்ஸ். அப்படி டிக்கெட் புக் பண்ணிட்டு, டிக்கெட்டின் PNR ஸ்டேட்டஸ், என்ன உணவு ஆர்டர், ரயில் அட்டவணை என அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியாம தவிக்குறீங்களா? இதற்காகவே ‘Railofy’ என்ற சேவை உள்ளது. 9881193322 என்ற எண்ணிற்கு Whatsapp-ல் ‘Hi’ என மெசேஜ் பண்ணுங்க. உங்க டிக்கெட் ஸ்டேட்டஸ் மொத்தமும் வந்துவிடும். யூஸ் பண்ணிக்கோங்க மக்களே.. SHARE IT.
News January 5, 2026
திமுகவுக்கு 90 நாள்கள் தான் இருக்கு: அண்ணாமலை

505 வாக்குறுதிகளில் 50-ஐக் கூட நிறைவேற்றாத CM, 80% பணிகளை முடித்துவிட்டதாக பொய் சொல்வதாக அண்ணாமலை கூறியுள்ளார். அது உண்மை என்றால், ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்ட தேதியை அரசால் வெளியிட முடியுமா என்ற அவர், TN-ல் எங்கு சென்றாலும், இந்த ஆட்சி எப்போது அகலும் என்ற பேச்சுதான் மேலோங்கியுள்ளது என விமர்சித்துள்ளார். மேலும், திமுகவுக்கு இன்னும் 90 நாள்கள்தான் மிச்சமுள்ளது எனவும் பேசியுள்ளார்.
News January 5, 2026
திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு மொத்தம் ₹5000

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை மொத்தம் (5 ஆண்டுகளில்) பொங்கல் பரிசாக ₹5000-ஐ முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆம்! 2022-ல் பொங்கல் தொகுப்பு (பணம் இல்லை), 2023 மற்றும் 2024-ல் பொங்கல் தொகுப்புடன் தலா ₹1000 வழங்கப்பட்ட நிலையில், 2025-ல் பொங்கல் தொகுப்பு (பணம் இல்லை) மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது 2026-ல் பொங்கல் தொகுப்புடன் ₹3000 என மொத்தம் ₹5000 அறிவிக்கப்பட்டுள்ளது..


