News October 3, 2025
கரூர் விவகாரத்தில் விஜய் செய்தது தவறு: சீமான்

கரூர் விவகாரத்தில் விஜய்க்கும், திமுகவுக்கும் டீலிங் இருக்கா என்று திருமா கேட்டதில் உண்மை இருக்கலாம் என சீமான் தெரிவித்துள்ளார். விரைவில் தேர்தல் வர உள்ளதாலேயே கரூர் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுவதாகவும் குற்றம்சாட்டினார். விஜய்க்காகவே மக்கள் கூடிய நிலையில் உயிரிழப்புகளுக்கு அவர் பொறுப்பேற்றிருக்க வேண்டும் என்றும், ஆனால் விஜய் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என சாடினார்.
Similar News
News October 3, 2025
திட்டமிட்ட செயல் அல்ல, விபத்து: தவெக வாதம்

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் திட்டமிட்ட செயல் அல்ல; நடந்தது ஒரு விபத்து என்று தவெக தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது கடமையை செய்யாமல் தவெகவினர் மீது போலீசார் குற்றம் சுமத்துகின்றனர். கூட்டம் அதிகமாக இருந்தால் நிகழ்வை ரத்து செய்யுமாறு காவல்துறை கூறியிருக்கலாமே எனத் தெரிவித்த தவெக தரப்பு, கருணாநிதி மறைவின்போது கூட்ட நெரிசலில் 2 பேர் உயிரிழந்த நிகழ்வையும் சுட்டிக்காட்டியது.
News October 3, 2025
பாகிஸ்தானின் 5 போர் விமானங்களை அழித்தோம்

Op Sindoor-ல் பாகிஸ்தானின் 4-5 போர் விமானங்களை வீழ்த்தியதாக இந்திய விமானப்படை (IAF) தலைமை தளபதி அமர்பிரீத் சிங் தெரிவித்துள்ளார். இதில் அமெரிக்க தயாரிப்பான F-16, சீன தயாரிப்பான JF 17 ரக விமானங்கள் அடங்கும். இந்திய விமானங்களை வீழ்த்தியதாக PAK சொல்வது கட்டுக்கதை என்ற அவர், அந்நாட்டின் போர் விமானங்களை மட்டுமின்றி, ரேடார்கள், கட்டுப்பாட்டு மையங்களையும் கூட துவம்சம் செய்ததாக கூறியுள்ளார்.
News October 3, 2025
சற்றுமுன்: அறிவித்தார் விஜய்

தவெகவின் முக்கியத் தலைவர்களான N.ஆனந்த், CTR நிர்மல் குமார் தலைமறைவாகியுள்ள நிலையில், விஜய் <<17903527>>புதிய அறிவிப்பை<<>> வெளியிட்டுள்ளார். கட்சிப் பணிகள் தொய்வின்றி தொடர 20 பேர் கொண்ட குழுவை நியமித்து அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மா.செ.,-க்களிடம் பேசிய அவர், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை, தான் விரைவில் சந்திக்க வேண்டும், அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.