News April 7, 2025
10 கிலோ உடல் எடை குறைந்த விஜயசாந்தி

நடிகையும், அரசியல்வாதியுமான விஜயசாந்தி 10 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். Arjun S/O Vyjayanthi என்ற படத்தில் காவல்துறை அதிகாரியாக விஜயசாந்தி நடிக்கிறார். இந்த படத்திற்காக அசைவம் சாப்பிடுவதை தவிர்த்ததோடு, டயட், தீவிர உடற்பயிற்சி செய்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த விஜயசாந்தி, வைஜெயந்தி படம் ரசிகர்களால் எப்பாேதும் நினைவு கூறப்படும் என்றார். இப்படம் வருகிற 18ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
Similar News
News April 9, 2025
வக்ஃப் மசோதவுக்கு எதிரான மனுக்கள்.. ஏப்., 15ல் விசாரணை

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 15க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் வரும் 15-ம் தேதி விசாரணை எடுத்துக்கொள்ளப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. வக்ஃப் மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில் அது சட்டமானது.
News April 9, 2025
REWIND:அந்த கால வாகனங்கள்.. நினைவிருக்கா?

ஒரு காலத்தில் நமது அடையாளமாக இருந்த சில வாகனங்கள் இன்று கண்காட்சிகளில்தான் காண வேண்டும். கிராமப்புறங்களில் முக்கிய போக்குவரத்து சாதனமாக இருந்த மாட்டு வண்டிகள், இப்போது அரிதாகிவிட்டன. நகரங்களில் பயணிக்க மக்கள் பயன்படுத்திய சைக்கிள் ரிக்ஷாக்களும் மறைந்துவிட்டன. அன்றைய சொகுசு கார் ஸ்டாண்டர்ட் 2000 தான். அதோடு அன்றைய எதிர்பார்ப்புகளை மிஞ்சிய கார் என்றால் அது ஸ்டாண்டர்ட் ஹெரால்ட்.
News April 9, 2025
வரலாற்றில் இன்று

* 1860 – முதன்முறையாக மனித குரல் பதிவு செய்யப்பட்டது. * 1870 – அமெரிக்க அடிமைத்தன எதிர்ப்புச் சங்கம் கலைக்கப்பட்டது* 1940 – ஜெர்மனி டென்மார்க் மற்றும் நோர்வே மீது படையெடுத்தது * 1963 – பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் முதல் கௌரவ அமெரிக்க குடிமகனாக ஆனார். *2013 – ஈரானில் 6.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 32 பேர் உயிரிழந்தனர்.