News May 25, 2024

சீமானை மீண்டும் குறிவைக்கும் விஜயலட்சுமி

image

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை விஜயலட்சுமி இடையேயான பிரச்னை கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்தது. இந்நிலையில் தற்போது சீமானுடனான சில வீடியோக்களை வெளியிடப் போவதாக விஜயலட்சுமி மீண்டும் பேசி வருகிறார். ஒவ்வொரு முறையும் இதேபோல் கூறுவதும், பிறகு பேக் அடிப்பதுமாக விஜயலட்சுமி இருந்து வருகிறார். அதேபோல் இதுவும் வெற்று மிரட்டலா?இல்லை உண்மையா? எனத் தெரியவில்லை.

Similar News

News March 14, 2026

அதிமுகவை பாஜக கபளீகரம் செய்யும்: உதயநிதி

image

பிஹாரில் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலையே EPS-க்கும் ஏற்படும் என உதயநிதி கூறியுள்ளார். 10 முறை CM ஆக இருந்த நிதிஷ்குமாரையே தற்போது ராஜ்யசபா MP ஆக மாற்றி, அம்மாநில ஆட்சியை பாஜக தன்வசமாக்கிவிட்டது என்ற அவர், இதேபோல் தான், 2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்று குறிப்பிட்டார்.

News March 14, 2026

தவெகவில் இருந்து நீக்குக.. விஜய்க்கு பரபரப்பு கடிதம்

image

‘அரசியல் முதிர்ச்சி இல்லாத நபர்களை கட்சியை விட்டு விலக்குங்கள்’ என விஜய்க்கு பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தி கடிதம் எழுதியுள்ளார். ரஜினி குறித்து ஆதவ் உள்ளிட்டோர் அரசியல் நாகரிகம் இல்லாத கருத்துகளால் தேவையற்ற மோதல்களையும், மரியாதை குறைபாடுகளையும் உருவாக்கி வருகின்றனர். தங்கள் மீதுள்ள மரியாதையும், அவர்களின் பேச்சால் பதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதால், கட்சியில் இருந்து நீக்குங்கள் என கூறியுள்ளார்.

News March 14, 2026

சசிகலா கட்சி சின்னமும் ஜெ., அழைப்பும்.. REWIND

image

அஇபுதமமுக கட்சியில் இணைந்துள்ள சசிகலா, அக்கட்சிக்கான தென்னந்தோப்பு சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார். இதற்கு முன்பாக 2016-ல் தமாகாவுக்கு இச்சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது இரட்டை இலையில் போட்டியிடுமாறு ஜெ., அழைத்தும், GK வாசன் செல்லவில்லை. தென்னந்தோப்பு சின்னத்தில் தோல்வியடைந்த அவர், பின்னாளில் அதிமுக சின்னத்திலேயே போட்டியிட்டு ராஜ்யசபா MP ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!