News February 27, 2025
விஜயலட்சுமி புகார்: சீமான் நேரில் ஆஜராக மாட்டார்?

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆஜராக அவருக்கு நேற்று முன்தினம் சம்மன் அளிக்கப்பட்டிருந்தது. நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News February 27, 2025
பிரபல நடிகை மிச்செல் டிராக்டன்பெர்க் மர்ம மரணம்

பிரபல ஹாலிவுட் நடிகை மிச்செல் டிராக்டன்பெர்க் (39) தனது வீட்டில் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 1996இல் வெளிவந்த புகழ்பெற்ற ‘ஹாரியட் தி ஸ்பை’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், பாபி தி வாம்பயர் ஸ்லேயர் (Buffy the Vampire Slayer) சீரிஸ் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். மிச்செல் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News February 27, 2025
8 பேரும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை: NDRF தகவல்

தெலங்கானாவில் சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலாளர்களும் உயிரிழந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் சேற்றில் சிக்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. நேற்று மீட்பு பணிகளில் இறங்கிய ராணுவத்தினரும், அங்கு சேற்றைத் தவிர வேறு எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். மேலும், அங்கிருக்கும் குப்பைகளை அகற்றினால் சுரங்கம் மீண்டும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
News February 27, 2025
இதுதான் IND- PAK இடையேயான வித்தியாசம்: PAK கோச்

PAK வீரர்கள் போதிய அளவில் ODIகளில் விளையாடாததே CT தொடரில் இருந்து விரைவில் வெளியேற காரணம் என அந்த அணியின் தலைமை கோச் ஆகிப் ஜாவித் தெரிவித்துள்ளார். IND வீரர்கள் 1500 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில், PAK வீரர்களோ 400க்கும் குறைவான போட்டிகளிலேயே விளையாடி உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், ஒரே மைதானத்தில் விளையாடுவதும் IND அணிக்கு சாதகமாக அமைவதாகவும் தெரிவித்துள்ளார்.