News April 13, 2025
அதிருப்தியில் விஜயதாரணி?

MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த விஜயதாரணிக்கு, எந்தப் பொறுப்பும் அறிவிக்கப்படவில்லை. அண்ணாமலை, சரத்குமார், வானதி, தமிழிசை உள்ளிட்டோர் தேசிய பொதுக்குழு உறுப்பினராக பதவியேற்றனர். ஆனால், புதிய பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த விஜயதாரணிக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அவர், கட்சியிலிருந்து விலகலாம் என கூறப்படுகிறது.
Similar News
News December 14, 2025
பயணிகளை மிரள வைத்த இண்டிகோ விமானம்

இண்டிகோ நிறுவனம் ஏற்கெனவே பயணிகளுக்கு பெரும் சிரமத்தை கொடுத்து வரும் நிலையில், ராஞ்சி ஏர்போர்ட்டில் மேலும் ஒரு ஷாக்கை கொடுத்துள்ளது. புவனேஸ்வரில் இருந்து ரஞ்சி வந்த இண்டிகோ விமானத்தின் பின் பகுதி தரையிறங்கும் போது ரன்வேயில் உரசியது. இதனால் விமான குலுங்கியதில் பயணிகள் அதிர்ச்சியில் அலறினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக விபத்து ஏற்படாததால் 70 பயணிகள் உயிர் தப்பினர்.
News December 14, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 14, கார்த்திகை 28 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 AM – 4:30 AM ▶திதி: தசமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
News December 14, 2025
கேரளா உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக படுதோல்வி

கேரளா உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட திமுக, அதிமுக ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. உப்புதரா – 9, சின்னக்கானல் – 3, தேவிகுளம் – 1, மறையூர் – 1, தேவிகுளம் – 1 என 15 இடங்களில் திமுகவும், இடுக்கி-19, பாலக்காடு – 4, திருவனந்தபுரத்தில் – 2 என 25 இடங்களில் அதிமுகவும் போட்டியிட்டு இருந்தன. அங்குள்ள 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 4-ல் வெற்றி பெற்றுள்ளன.


