News March 22, 2024

விஜயபாஸ்கர், ஜி ஸ்கொயர் இடங்களில் தொடரும் ரெய்டு

image

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ஜி ஸ்கொயர் நிறுவன இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நீடிக்கிறது. 2022ஆம் ஆண்டில் டிவிஏசி நடத்திய சோதனையின் அடிப்படையில், புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடக்கிறது. இதேபோல், கடந்த ஆண்டு ஏப்ரலில் ஐ.டி. நடத்திய சோதனையின் அடிப்படையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.

Similar News

News July 9, 2025

Bharat Bandh: TN-ல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்

image

மத்திய அரசுக்கு எதிராக <<16998000>>13 தொழிற்சங்கங்கள்<<>> இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை என சிலர் சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் எனவும், பஸ்களும் வழக்கம்போல் இயக்கப்படும் என அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், குமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காலையிலேயே பஸ் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

News July 9, 2025

Drug Test: இந்தியாவின் Ex. உலக சாம்பியனுக்கு ஒரு வருடம் தடை!

image

இந்தியா மல்யுத்த வீராங்கனை ரித்திகா ஹூடா(22) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக ஒரு வருடத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஜூலை 17 முதல் நடைபெறவுள்ள Ranking Series tournament, & செப்டம்பரில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவர் கலந்து கொள்ளவும் தடை செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 2023-ல் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட மல்யுத்த உலக சாம்பியன்ஷிப்பை ரித்திகா வென்றிருந்தார்.

News July 9, 2025

அரசியல் சுற்றுப்பயணம் செல்லும் ஓபிஎஸ்!

image

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். ஆனால், பாஜகவுடன் அதிமுக மீண்டும் இணைந்தபிறகு ஓபிஎஸ் கண்டுகொள்ளப்படவில்லை. குறிப்பாக, சந்திப்பதற்கு அமித்ஷா நேரம் கொடுக்கவில்லை, முருகன் மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை. அதேநேரம், நயினார் மட்டும் ஓபிஎஸ் NDA-ல் உள்ளதாக கூறி வருகிறார். எனவே, தனது இருப்பை காட்டிக்கொள்ள பயணத்தை அறிவித்திருக்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

error: Content is protected !!