News January 1, 2025
புத்தாண்டு வாழ்த்து சொன்ன விஜய்

தவெக தலைவர் விஜய் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது X பதிவில், மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம், உழவர்கள், தொழிலாளர்களின் நலன் காப்போம், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளைப் பாதுகாப்போம் எனவும், உண்மையான சமூகநீதியுடன் சமத்துவத் தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அனைவரிடமும் அமைதி, ஒற்றுமை, சகோதரத்தும், மனிதநேயம் செழித்து வளரவும் வாழ்த்தியுள்ளார்.
Similar News
News September 13, 2025
திமுகவை சீண்டிய விஜய்

விஜய் தனது முதல் பரப்புரையை, திமுக எதிர்ப்புடனேயே தொடங்கியுள்ளார். 2021-ல் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பழைய ஓய்வூதிய திட்டம் என்னாச்சு? மாதந்திர மின்கட்டண கணக்கீடு என்னாச்சு? மாணவர்களின் கல்விக் கடன் ரத்து என்னாச்சு? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய விஜய், நாம் கேட்டுக்கொண்டே இருந்தாலும் அவர்களிடம் பதில் இல்லை என சாடியுள்ளார்.
News September 13, 2025
தொண்டர்களாக மாற மறுக்கும் ரசிகர்கள்?

விஜய் அரசியல் கட்சி தொடங்கி ஒன்றரை ஆண்டாகிவிட்டது. இன்னும் கட்சி சார்ந்த நிகழ்வுகளுக்கு செல்லும் தவெக தொண்டர்கள், தியேட்டருக்கு செல்வது போன்ற மனநிலையிலேயே உள்ளனர். விஜய்யின் பேச்சை மீறி குழந்தைகளை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது, அருகில் இருக்கும் கட்டடங்கள், மரங்கள் மீதேறி அலப்பறை செய்வது போன்ற நிலையே தொடர்கிறது. இன்றைய சம்பவங்களும் அதையே சொல்கின்றன. தேர்தலுக்குள் இந்த நிலை மாறுமா?
News September 13, 2025
மணிப்பூர் மக்களை மோடி அவமதித்துவிட்டார்: கார்கே

மணிப்பூரில் மோடி செலவிடும் 3 மணி நேரம் மக்கள் மீதான கருணை அல்ல என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். 46 நாடுகளுக்கு பயணம் செய்த மோடிக்கு, சொந்த மக்களுக்கு அனுதாபத்தை தெரிவிக்க நேரமில்லை என குற்றம்சாட்டினார். கடைசியாக ஜனவரி 2022-ம் ஆண்டு தேர்தலுக்காக மட்டுமே மோடி மணிப்பூர் வந்ததாகவும், மோடியின் தற்போதைய பயணத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனவும் சாடியுள்ளார்.