News September 28, 2025

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு விஜய் துணை நிற்பார்: தவெக

image

கரூரில் ஏற்பட்ட துயரத்தால் விஜய் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளதாக தவெகவின் வழக்கறிஞர் அணி தலைவர் அறிவழகன் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு விஜய்யும், தவெகவும் உறுதுணையாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விஜய் ஆலோசித்து முடிவெடுப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News January 21, 2026

குன்னூர் நகராட்சி ஆணையர் அதிரடி கைது!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில், கட்டிட பணிக்கு அனுமதி வழங்க, நகராட்சி ஆணையர் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின்பேரில் குன்னூர் நகராட்சி ஆணையாளர் இளம்பருதி மற்றும் உதவியாக இருந்த நகராட்சி இளநிலை உதவியாளர் விக்னேஷ் ஆகிய இருவரையும், லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குன்னூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

News January 21, 2026

புதன்கிழமையில் செல்வத்தை குவிக்கும் மகாலட்சுமி வழிபாடு

image

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். இன்று வீட்டில் மகாலட்சுமிக்கு இரண்டு மண் அகல் விளக்குகளில் நெய் விட்டு தீபம் ஏற்றி, பூக்களால் அர்ச்சனை செய்து, பிரசாதம் படைத்து வழிபடுங்கள். பூஜை செய்யும்போது, லட்சுமி அஷ்டோத்திரம் மந்திரங்களை சொல்லி வணங்கலாம். இதனால், குழந்தைகளின் கல்வி மேம்படும். திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். SHARE IT.

News January 21, 2026

தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை இன்றும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $106.00 உயர்ந்து $4,784.53-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ்-க்கு $0.75 உயர்ந்து $95.33 ஆக உள்ளது. இதனால், இன்று (ஜன.21) இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!