News September 27, 2025
கிட்னி திருட்டை கையில் எடுத்த விஜய்

நாமக்கல் கவிஞர் ராமலிங்கனாரின் ‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ பாடலுடன் விஜய் தனது பரப்புரையை தொடங்கினார். எடுத்தவுடனே திமுக MLA-வின் மருத்துவமனையில் கிட்னி திருடப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், 2026-ல் தவெக ஆட்சி அமைந்தவுடன் கிட்னி திருட்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கி தரப்படும் என்றார்.
Similar News
News September 27, 2025
குழந்தையின் நுரையீரலில் LED பல்பு

குழந்தைகள் வளரும் போது, பொருள்களை வாயில் போட்டு கொள்வதும், சுவைத்து பார்ப்பதும் இயல்புதான். ஆனால், மும்பையில் நடந்த சம்பவம் நம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தனியார் ஹாஸ்பிடலில் 3 வயது சிறுவனின் நுரையீரலில் 3 மாதங்களாக சிக்கியிருந்த சிறிய LED பல்பை டாக்டர்கள் அகற்றியுள்ளனர். குழந்தைகள் விளையாடும் இடத்தில் காயின், பட்டன், ஊசி போன்றவற்றை வைக்காதீர்கள் எனவும் டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE IT.
News September 27, 2025
பிஹார் தேர்தல் எப்போது? அடுத்த வாரம் அறிவிப்பு

பிஹார் மாநில பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. நவ.22-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒருபுறம் இருக்க ‘வாக்கு திருட்டு’ உள்ளிட்டவற்றை NDA கூட்டணி ஆட்சிக்கு எதிராக ராகுல், தேஜஸ்வி பிரச்சாரம் செய்து வருகின்றனர். மறுபுறம் ஏராளமான இலவச அறிவிப்புகளை ஆளும் NDA அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
News September 27, 2025
இபிஎஸ்ஸை ஏற்க முடியாது: டிடிவி

அண்ணாமலையை தொடர்ந்து, தேவைப்பட்டால் தானும் டிடிவியை சந்திப்பேன் என நயினார் கூறியிருந்தார். இந்நிலையில், டெல்லி நிர்பந்தத்திற்கு அடிபணிந்தே அதிமுகவில் இருந்து இபிஎஸ் தன்னை நீக்கியதாக TTV குற்றம் சாட்டியுள்ளார். மேலும் EPS தலைமையை ஒருபோதும் ஏற்க முடியாது எனக் கூறிய அவர், இனியும் அதிமுக தொண்டர்கள் விழித்துக் கொள்ளவில்லை என்றால் 2021-ஐ விட 2026-ல் படுதோல்வியை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.