News August 19, 2024

விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற விஜய்

image

மறைந்த DMDK தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு, நடிகரும், TVK தலைவருமான விஜய் நேரில் சென்றுள்ளார். ‘The G.O.A.T’ படத்தில் AI தொழில்நுட்பம் மூலம், கெஸ்ட் ரோலில் விஜயகாந்த் நடிக்கும் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேரில் சென்ற அவர், பிரேமலதாவை சந்தித்து நன்றி கூறினார். மேலும், TVK கட்சி தொடங்கியதற்காக பிரேமலதாவிடம், அவர் வாழ்த்து பெற்றதாகவும் கூறப்படுகிறது.

Similar News

News April 2, 2026

வங்கி கணக்கில் ₹5,000.. வந்தாச்சு HAPPY NEWS

image

அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்துக்கான ஓய்வூதியத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில், லட்சக்கணக்கான பயனாளிகளின் வங்கி கணக்கில் ₹1,000 முதல் ₹5,000 வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 18 முதல் 40 வயது வரையான வருமான வரி கட்டாத சேமிப்பு கணக்குதாரராக இருந்தால் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். நீங்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்ப 60 வயதுக்குபின் ஓய்வூதியம் கிடைக்கும். SHARE IT

News April 2, 2026

குலுங்கி குலுங்கி சிரிக்கும் நோய் தெரியுமா?

image

சந்தோஷத்தில் மட்டுமல்ல, நோயால்கூட சிரிப்பு வரும். ஆம், வெடித்துச் சிரிப்பது (அ) கெக்கலிக்கும் ‘Laughing Epilepsy’ என்ற ஒருவகை அரிய நோய் உள்ளதாம். மூளையின் ஹைப்போதாலமஸ் பகுதியில் ஏற்படும் பாதிப்பால் வலிப்புடன் சிரிப்பு வருவதே இதன் அறிகுறி. இந்நோய் பாதித்த ஒருவருக்கு சிக்கலான சர்ஜரி செய்து குணப்படுத்தியுள்ளனர் ஜோத்பூர் எய்ம்ஸ் டாக்டர்கள். நாட்டிலேயே 2 ஹாஸ்பிடல்களில் தான் இச்சிகிச்சை வசதி உள்ளதாம்.

News April 2, 2026

உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு வெளியானது!

image

DCM உதயநிதி ஸ்டாலின் தனக்கு ₹12.92 கோடிக்கு அசையும் சொத்துகளும், ₹7.72 கோடிக்கு அசையா சொத்துகளும் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். இதில் ₹1 கோடி மதிப்புள்ள டிஃபெண்டர் காரும் அடங்கும். அவரது மனைவி கிருத்திகாவிடம் ₹1.87 கோடி மதிப்பிலான 1,600 கிராம் தங்கம் உள்பட ₹13.25 கோடி அசையும் சொத்துகள் உள்ளதாகவும், அசையா சொத்துகள் எதுவுமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!