News August 28, 2025

Uncle என விஜய் அழைத்தது சரிதான்.. K.S.ரவிக்குமார்

image

தவெக மாநாட்டில் முதல்வரை ‘ஸ்டாலின் Uncle’ என விஜய் கூறியதற்கு தொடர்ந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்நிலையில், Uncle என விஜய் அழைத்ததில் தவறில்லை என இயக்குநர் K.S.ரவிக்குமார் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் கூட அவரை பார்க்கும்போது ‘வணக்கம் Uncle’ என்றே பேசுவதாக குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இது அரசியல் நாகரிகமற்றது என பல்வேறு கட்சியினரும் கூறி வருகின்றனர்.

Similar News

News August 28, 2025

தங்கம் விலை தலைகீழாக மாறுகிறது

image

<<17539704>>1 சவரன்<<>> ஆபரணத் தங்கத்தின்(22 காரட்) விலை மீண்டும் ₹75,000-ஐ கடந்துள்ளது. தங்கத்தின் விலை உயர்வு கணிப்புப்படி, 2030-ஆம் ஆண்டில் ஒரு சவரன் இருமடங்காக அதிகரித்து ₹1.50 லட்சமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். போர் உள்ளிட்ட காரணங்களால் பாதுகாப்பான முதலீடாக தங்கம், வெள்ளி பார்க்கப்படுவதாகவும், பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கிக் குவிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

News August 28, 2025

பிச்சை எடுப்பதை தடை செய்யும் மசோதா நிறைவேற்றம்

image

பிச்சை எடுப்பதை தடை செய்யும் மசோதா 2025, மிசோரம் சட்டமன்றத்தில் நிறைவேறியுள்ளது. இதன் மூலம் அரசு, NGO இணைந்து பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பிச்சைக்காரர்களை தங்க வைக்க மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளது. கடந்த 1972-லேயே தமிழகத்தில், அப்போதைய CM கருணாநிதியால் ‘பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்’ கொண்டுவரப்பட்டது.

News August 28, 2025

BREAKING: திமுக மூத்த தலைவர் காலமானார்

image

திமுக மூத்த தலைவரும், முன்னாள் MLAவுமான சின்னசாமி காலமானார். 1971, 1984, 1989 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியுடன் மிக நெருக்கமாக இருந்த இவர், தருமபுரி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். அவரது உடலுக்கு திமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

error: Content is protected !!