News October 4, 2025
விஜய் தொண்டர்களே இனி இதை செய்யாதீங்க

கரூர் துயர சம்பவத்துக்குபின் நாம் இன்னும் ஒற்றுமையாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என தவெக தொண்டர்களுக்கு கட்சி பொறுப்பாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சமூக வலைதளங்களில் ஆத்திரப்பட்டு பதிவுகள் போட வேண்டாம். ஆராய்ந்து செயல்படும் அறிவால் மட்டுமே அரசியல் ஜெயிக்கும். சண்டையிடுவது ஆற்றல் விரயம்; அது எதிரிகளின் தந்திரம். ஒவ்வொரு TVK தொண்டரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அறிவுரை கூறுகின்றனர்.
Similar News
News March 19, 2026
பாகிஸ்தானை விட பின்தங்கிய இந்தியா.. எதில் தெரியுமா?

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 9-வது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. தனிநபர் GDP, ஆயுட்காலம், சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்த பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இதில் பாக்., 104-வது இடத்தை பிடித்துள்ள நிலையில், இந்தியா 116-வது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான்(147) உள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
News March 19, 2026
ஓரிரு நாளில் முடிவுக்கு வரும் திமுக கூட்டணி பஞ்சாயத்து

புதுச்சேரியில் திமுக-காங்., கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதற்கிடையில் நேற்று புதுச்சேரியிலுள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்.,- திமுகவினர் போட்டிபோட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், ஓரிரு நாள்களில் தொகுதிப்பங்கீடு உள்ளிட்டவை முடிந்துவிடும் எனவும் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.
News March 19, 2026
விடுமுறை .. சற்றுமுன் புதிய அறிவிப்பு வெளியானது

தமிழக பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23-ல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அன்றைய தினம் அரசு & தனியார் நிறுவனங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என ECI உத்தரவிட்டுள்ளது. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறையை ECI வலியுறுத்தியுள்ளது. ஒருவேளை விடுமுறை அளிக்கவில்லையென்றால் 1950 என்ற உதவி எண்ணில் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம்.


