News March 29, 2024
விஜய் டிவி சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரில் நடித்த அக்ஷிதாவுக்கும், ப்ரீத்தம் சுரேஷ் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. கர்நாடகாவின் கூர்க்கில் இரு வீட்டார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நேற்று நடந்துள்ளது. அக்ஷிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘My Man’ என்ற ஹேஷ்டேக்குடன் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
கரூர்: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News December 7, 2025
மதியத்தில் விஜய் பொதுக்கூட்டம்

ஈரோட்டில் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் டிச.16-ம் தேதி மதியம் 1 – மாலை 6 மணிக்குள் நடைபெறவிருப்பதாக கலெக்டரிடம் செங்கோட்டையன் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு, பவளத்தாம்பாளையத்தில் 75,000 பேர் வந்து, செல்லும் வகையில் 7 ஏக்கர் இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், ரோடு ஷோ இல்லாமல் பரப்புரை வாகனத்தில் விஜய் உரையாற்ற உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News December 7, 2025
தவெகவுக்கு செல்கிறாரா இந்த திமுக அமைச்சர்?

அடுத்த பிப்ரவரிக்குள் 2 சிட்டிங் மினிஸ்டர்கள் தவெகவுக்கு வருவார்கள் என ஆதவ் பேசியிருந்தார். இந்நிலையில் அதில் ஒருவர் KKSSR-ஆக இருக்கலாமோ என சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கெனவே தேர்தலில் KKSSR-க்கு சீட் கிடைப்பது டவுட் என பேசப்படுகிறது. இதனை ஸ்மெல் செய்தே, தவெக அவரை அணுகக்கூடும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பான Official தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


