News September 21, 2025

திமுக அமைச்சர்களை குறிவைத்து அடிக்கும் விஜய்

image

2026-ல் DMK vs TVK இடையேதான் நேரடி மோதல் என்பதை விஜய் மக்கள் மத்தியில் பரப்புகிறார். திமுக அரசின் தவறான செயல்பாடுகளையும், அவர்கள் செய்ய தவறியவற்றையும் விமர்சிக்கும் அவர், தனது பரப்புரையின்போது அந்தந்த மாவட்ட அமைச்சர்களை தாக்குவதையும் நிறுத்தவில்லை. மதுரை மாநாட்டில் மூர்த்தி, திருச்சியில், நேரு, அன்பில், அரியலூரில் சிவசங்கர், நேற்று டிஆர்பி ராஜா பெயரை குறிப்பிட்டு விஜய் அட்டாக் செய்தார்.

Similar News

News September 21, 2025

GOOD NEWS.. விலை ₹8,000 வரை குறைந்தது

image

GST சீர்திருத்தத்தை அடுத்து, பல்வேறு பொருள்களின் விலையை நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. அந்த வகையில், AC, டிஷ்வாஷர் ஆகியவற்றின் விலையும் குறைந்துள்ளது. இதன்படி, AC விலை ₹4,500 வரையிலும், டிஷ்வாஷர் ₹8,000 வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, Daikin 1 டன் 3 star AC ₹50,700-லிருந்து ₹46,730-க்கு குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

News September 21, 2025

முதல்முறை குடிச்சப்போ முடியல: பாபநாசம் நடிகை

image

தான் முதல்முறையாக மது அருந்தியபோது தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை என்று நடிகை எஸ்தர் அனில் கூறியுள்ளார். ‘பாபநாசம்’ படத்தில் கமலின் இளைய மகளாக நடித்த இவரை, கடைசியாக ‘மின்மினி’ படத்தில் பார்க்க முடிந்தது. இந்நிலையில், தனது மது பழக்கம் குறித்து மனம் திறந்த அவர், முதல்முறை குடித்துவிட்டு வீடு திரும்பியதும் ஒரு நாள் முழுவதும் தூங்கியதாகவும், அதன்பின் குடியை விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

News September 21, 2025

2 நிமிடங்களில் டிரைவிங் லைசன்சில் நம்பர் மாற்றலாம்

image

➤<>https://sarathi.parivahan.gov.in/<<>> -க்கு சென்று Online Services & Driving License Related Services ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க ➤உங்கள் மாநிலத்தை தேர்வு செய்யுங்கள் ➤பிறகு Other Menu என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால், Mobile Number Update என காட்டும் ➤அதை க்ளிக் செய்து லைசன்ஸ் தொடர்பான விவரங்களை உள்ளிடுங்கள் ➤புதிய மொபைல் நம்பரை Type செய்தால் உடனடியாக அப்டேட் ஆகிவிடும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!