News April 24, 2025

பிரேக் எடுக்கும் விஜய்?.. ‘ஜனநாயகன்’ பட அப்டேட்!

image

கடைசி படமாக ‘ஜன நாயகன்’-ல் நடித்து வரும் விஜய், ஷூட்டிங்கிற்கு ஒரு வாரம் ப்ரேக் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையொட்டி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஷூட்டிங் நிதானமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசியல் பணி காரணமாக ஷூட்டிங்கிற்கு முழுக்கு போட விஜய் திட்டமிட்டுள்ளாராம். எனினும், மே மாத இறுதிக்குள் விஜய்யின் போர்ஷன் நிறைவடையும் என கூறப்படுகிறது.

Similar News

News April 24, 2025

காய்கறிகள் விலை கடும் சரிவு!

image

வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகள் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. அனைத்து காய்கறிகளும் கிலோவுக்கு சராசரியாக ₹5 வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ உருளைக்கிழங்கு – ₹25, தக்காளி – ₹15, கேரட் – ₹25, பீட்ரூட் – ₹10, பெரிய வெங்காயம் – ₹18, இஞ்சி – ₹60, முள்ளங்கி – ₹12, சின்ன வெங்காயம் – ₹40 , கத்திரிக்காய் – ₹20, முருங்கை – ₹70க்கு விற்பனையாகிறது.

News April 24, 2025

பஹல்காம் விவகாரம்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு

image

பஹல்காம் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என கார்கே தெரிவித்துள்ளார். இது இந்தியா மீதான தாக்குதல், இதனால் நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். இது அரசியல் செய்ய வேண்டிய நேரமில்லை, காங்கிரஸ் இதில் அரசியல் செய்யாது, தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து சக்தியையும் மோடி அரசு பயன்படுத்த வேண்டும் என்றும் கார்கே குறிப்பிட்டுள்ளார்.

News April 24, 2025

₹10 லட்சத்திற்கு அதிகமான பொருள் வாங்கினால் 1% வரி

image

₹10 லட்சத்திற்கு மேல் விலையுடைய ஆடம்பர பொருள் வாங்கும்போது இனி 1% டிசிஎஸ் (Tax collected at source) வரி விதிக்கப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ஆடம்பர கைப்பை, கைக் கடிகாரங்கள், காலணிகள், ஓவியங்கள் உள்ளிட்டவை வாங்கினால் கூடுதலாக வரி விதிக்கப்படும். இது ஏப்.22 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதற்கு முன்பு வாங்கிய பொருள்களுக்கு இது பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!