News October 6, 2025
புதிய முடிவெடுத்தார் விஜய்

பரப்புரை வியூகத்தை மாற்ற விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், 2016 தேர்தலில் ஜெயலலிதா மண்டல வாரியாக பரப்புரை மேற்கொண்டதைபோல், விஜய் பரப்புரை செய்ய முடிவெடுத்துள்ளாராம். மாவட்ட தலைநகரங்களின் புறநகர் பகுதிகளில் விஜய் நிற்பதற்கு மட்டும் ஒரு மேடை அமைத்து அதில் பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News October 7, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 7, புரட்டாசி 21 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 1:45 PM – 2:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: பிரதமை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை
News October 7, 2025
TRB தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்திவையுங்கள்: அன்புமணி

அக்.12-ம் தேதி நடைபெறவுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என TN அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால் அத்தேர்வை எதிர்கொள்வதற்கு, கூடுதல் அவகாசம் தேவை என தேர்வர்கள் கோரிக்கை விடுப்பது நியாயமானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், கணினி முறையில் (CBT) தேர்வை நடத்த வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
News October 7, 2025
மாறும் கூட்டணி: தேமுதிகவுக்கு பின்னடைவா?

திமுக, NDA, தவெக என 3 பக்கமும் கூட்டணி ஆப்சனை ஓபன் செய்து வைத்திருந்த தேமுதிக, தற்போது ரேஸில் பின்தங்கியுள்ளது. ராஜ்யசபா சீட்டை அதிமுக கைவிரித்தது முதல், திமுகவிடம் அக்கட்சி நெருக்கம் காட்டத் தொடங்கியது. அதிமுக ஆப்சனையும் குளோஸ் செய்யாமல், சீட் பேரத்தை கூட்ட தவெகவுக்கும் கதவை திறந்து வைத்தது. தற்போது NDA+விஜய் கூட்டணி அனுமானங்கள், தேமுதிகவின் பேர வலிமைக்கு ’செக்’காக மாறியுள்ளன.