News April 23, 2025
விஜய் கடும் கண்டனம்

ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்டிருக்கும் தீவிரவாத தாக்குதலுக்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அங்கு அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும் அவர் தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்களையும் விஜய் பதிவு செய்துள்ளார்.
Similar News
News October 18, 2025
மலையாள படத்தின் ரீமேக்கா ‘ஜனநாயகன்’?

பாலய்யா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் தான் ‘ஜனநாயகன்’ என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போது ‘ஜனாதிபதியம்’ என்ற மலையாள படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. போலீஸ் அதிகாரியான விஜய், சந்தர்ப்ப சூழலால் அரசியலுக்கு சென்று, CM ஆவதுதான் கதை என்கிறார்கள். எது எப்படியோ, விஜய்யின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு ஹெவியாக இருக்கிறது.
News October 18, 2025
உடல் எடை குறைய காலையில் இந்த Exercise பண்ணுங்க!

ஜம்பிங் ஜாக்ஸ் செய்வதால், உடல் எடை குறைவது, இதய ஆரோக்கியமும் மேம்படுவது, தசைகள் & எலும்புகள் வலு பெறுவது போன்ற நன்மைகள் கிடைக்கின்றன ✦செய்முறை: கால்களுக்கு இடையே கொஞ்சம் இடைவேளைவிட்டபடி, கைகளை ஒன்றாக வைத்து நிற்கவும் ✦கால்களை மடக்காமல், நன்கு விரித்து குதிக்கவும் ✦அப்போது, கைகளை தலைக்கு மேல் கொண்டு சேர்க்கவும் ✦பிறகு, பழைய நிலைக்கு திரும்பவும். துவக்கத்தில் 2 செட்களாக 15 விநாடிகள் செய்யலாம்.
News October 18, 2025
பெண்களை குறிவைத்து வியூகம்: திமுகவுக்கு செக்?

தேர்தலில் பெண்களின் வாக்குகளை கவர, விடுபட்ட மகளிருக்கு உரிமை தொகை வழங்க திமுக முடிவு செய்துள்ளது. அதை முறியடிக்க பாஜக வியூகம் அமைத்து வருகிறது. டாஸ்மாக், சாராய உயிரிழப்புகள், போதைப்பொருள், சட்டம் ஒழுங்கு, EX அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சுக்களை தொகுத்து வீடுவீடாக சென்று துண்டறிக்கை கொடுத்து பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. தீபாவளிக்கு பிறகு இப்பிரசாரம் தொடங்க உள்ளது.