News December 6, 2024
சாதி குறித்து மாஸாக பேசிய விஜய்

அம்பேத்கர் நூல் வெளியிட்ட விழாவில் பங்கேற்றது ஒரு வரமாக நினைக்கிறேன் என்று விஜய் தெரிவித்துள்ளார். சாதி படிநிலையால் அம்பேத்கர் பட்ட கஷ்டங்களை குறிப்பிட விஜய், வன்மத்தை மட்டும் காட்டிய இந்த சமூகத்திற்கு அம்பேத்கர் திரும்பி என்ன செய்தார் என்பதை நினைத்தால் மெய்சிலிர்கிறது எனக் கூறினார். சாதி, மதங்கள் குறித்தும் அவர் மிகத் தெளிவாக பேசியுள்ளார்.
Similar News
News November 12, 2025
வங்கதேசத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டம்

வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். பள்ளிகளில் P.E.T மற்றும் இசை பயிற்றுவிக்கும் கலைஞர்களின் பணி நியமனத்தை அரசு ரத்து செய்துள்ளது. பட்ஜெட் கட்டுப்பாடுகளே இந்த முடிவிற்கான காரணம் என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அவை இஸ்லாமியத்திற்கு விரோதமானது என்று இஸ்லாமிய குழுக்கள் கொடுத்த அழுத்தமே பணி நியமன ரத்துக்கு காரணம் என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
News November 12, 2025
RDX எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?

உலகின் மிகவும் ஆபத்தான வெடிபொருளான RDX (Royal Demolition Explosive), இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டதாகும். இதில் சிறிய அளவு வெடித்தால் கூட ஒட்டுமொத்த ஏரியாவும் சிதைந்து போகும். அதே நேரத்தில் IED என்பது RDX, TXT அல்லது அமோனியம் நைட்ரேட் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட ஒரு வெடிபொருள் சாதனமாகும். இந்த அனைத்து வெடிபொருள்களை ஒப்பிடுகையில், RDX மிகவும் ஆபத்தானது.
News November 12, 2025
சத்தீஸ்கரில் 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிஜப்பூர் தேசிய பூங்கா பகுதியில், இன்று காலையில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்திய போது, மோதல் வெடித்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 303 ரைபிள்ஸ், INSAS ரைபிள்ஸ், stenguns, பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


