News October 28, 2024
விஜய் பேச்சு; கிருஷ்ணசாமி ஆதரவு

கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்ற தவெக தலைவர் விஜயின் அறிவிப்புக்கு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வரவேற்றுள்ளார். அறிக்கையில், ’தமிழ்நாட்டில் 75 வருடத்தில் எந்த அரசியல் கட்சியும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனும் கூட்டணி ஆட்சி குறித்து வெளிப்படையாக பேசவில்லை. ஆனால் தம்பி விஜய், தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அந்த முழக்கத்தை முன் வைத்துள்ளார்’ என்றார்.
Similar News
News August 24, 2025
ரூ.45 லட்சம் மதிப்புள்ள நகையை திருட்டிய 2 பேர் கைது

பெரம்பலூர் சாமியப்பா நகர் பகுதியை சேர்ந்த உமர் பாஷாவின் வீட்டில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் இருந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள தங்கம் வெள்ளி நகை மற்றும் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வேப்பந்தட்டை பாலையூர் பகுதியை சேர்ந்த நவீன் குமார் (25), திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (27) ஆகியோரை கைது செய்தனர்.
News August 24, 2025
‘அம்மா நான் சாகப்போறேன்.. என் சாவுக்கு 3 பேர் காரணம்’

தெலங்கானாவில் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இளைஞர் கொடிரெக்கலா சுதீர்(24) தனது கடிதத்தில், ‘நான் சாகப்போகிறேன். எனது சாவுக்கு 3 பேர் காரணம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் சுதீர் தவறான உறவில் இருந்ததாக அவரது கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் வதந்தி பரப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. சோகம்
News August 24, 2025
‘எஞ்சாமி தந்தானே’… ‘இட்லி கடை’ 2-வது பாடல்

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் 2-வது பாடல் ‘எஞ்சாமி தந்தானே’ விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிறது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கிராமிய குத்து பாடலாக எஞ்சாமி தந்தானேவை உருவாக்கியுள்ளார். சிறுவர்களுடன் தனுஷ் குத்தாட்டம் போடும் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸிற்கு ‘இட்லி கடை’ திட்டமிடப்பட்டுள்ளது.