News October 8, 2025

விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவ ராஜ்குமார்

image

விஜய் தனது அரசியல் பயணத்தில் யோசித்து நிதானமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சிவ ராஜ்குமார் அறிவுறுத்தியுள்ளார். திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்தார். விஜய்யின் அரசியல் பேச்சு நன்றாக இருந்ததாக குறிப்பிட்ட அவர், கரூர் துயர் ஒரு நேரக்கூடாத நிகழ்வு என்றும், அதனால் வருத்தமடைந்ததாகவும் கூறினார்.

Similar News

News October 8, 2025

ஹீரோவாகும் உதயநிதியின் மகன் இன்பநிதி

image

DCM உதயநிதியின் மகன் இன்பநிதி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்பநிதி தற்போது நடிப்பு பயிற்சி எடுத்து வருகிறார். அதன் வீடியோக்கள் SM-ல் வெளியாகி வைரலானது. அண்மையில் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், அவர் ஹீரோவாக களமிறங்க உள்ளதாகவும் அந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

News October 8, 2025

CJI மீது காலணி வீச்சு: கிரிமினல் வழக்கு தொடர கோரிக்கை

image

SC CJI பிஆர் கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது, கிரிமினல் வழக்கு தொடர சம்மதம் கோரி, அட்டர்னி ஜெனரலுக்கு மூத்த வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் கடிதம் எழுதியுள்ளார். கிஷோரின் செயல் உச்சநீதிமன்றத்தின் மாண்பை குலைப்பதுடன், அரசியலமைப்பையும் அவமதிப்பதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், சம்பவத்துக்கு பின்பும் அவரது நடத்தை மோசமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News October 8, 2025

கரூரில் திட்டமிட்டு பிரச்னை உருவாக்கப்பட்டதா? EPS

image

கரூரில் வேண்டுமென்றே திட்டமிட்டு அந்த கூட்டம் சரியான முறையில் நடைபெற கூடாது என்பதற்காக பிரச்னை உருவாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதாக EPS பேசியுள்ளார். முன்னதாக, கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் வெளியிட்ட வீடியோ ‘CM சார் பழிவாங்குவதாக இருந்தால் தன்னைப் பழிவாங்குங்கள்’ என விஜய் பேசியிருந்த நிலையில், EPS-ம் சந்தேகம் எழுப்பியுள்ளது அரசியல் களத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

error: Content is protected !!